ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா
ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா
திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. திருச்சி ஜே கே சி அறக்கட்டளை நிறுவனர், ஐ.சி.எப் பேராய தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
பேராசிரியர் ரவி சேகர், ஆடிட்டர் எம்.ரிச்சாட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர், முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்
கே எஸ் சுப்பையா பாண்டியன், முத்தரையர் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர்
சி பி ரமேஷ் மற்றும் போலீஸ் பார்வை ஆசிரியர் பாலகிருஷ்ணன், ராகேஷ், பேராசிரியர் டாக்டர் அருள், பேராசிரியர் எம்.சந்திரசேகரன், ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் ஏ சையது ஜாகீர் ஹசன், நளினி வீரமணி அறக்கட்டளை ஆடிட்டர்
பி.வீரமணி, ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஸ்டீல் சலாவுதீன், தமிழ்நாடு ஏரோஸ்கெட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் தமிழ் சங்கத் தலைவர் பால் ஜெயக்குமார், லுதரன் முன்னேற்ற பேரியக்க நிர்வாகி எஸ்டி சிங், பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் நிறுவன தலைவர் வேல்முருகன், பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாநில மக்கள் தொடர்பாளர் டூயட் சசிகுமார்,
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் N T. முருகன், பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் அன்வர் தீன், ஜே.கே.சி மகளிர் பிரிவு தலைவி திருமதி சகுந்தலா சந்தானகிருஷ்ணன்,இன்ஜினியர் எஸ் சம்புக வேல், எஸ் ராஜலிங்கம், வெங்கடேஸ்வரா ராவ், ஆசிரியர் எம் அலெக்சாண்டர், விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 10 பேருக்கு கல்வி உதவி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.