- Advertisement -

வாணாபுரத்தில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா! தவெக – விசிக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை!

- Advertisement -

வாணாபுரத்தில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா! தவெக – விசிக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை!

 

​வாணாபுரம் | செப் 17:

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் புதூர்கூட்ரோடு மும்முனை சந்திப்பில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

 

Vagai

​இதையொட்டி, அப்பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

 

Bismi

ரிஷிவந்தியம் தொகுதி தமிழக வெற்றிக் கழக மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் பிரபுராஜ் (வாகை தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவனர்) மற்றும் மாவட்டச் செயலாளர் கா. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

துரை, தனசேகர், மணலூர் அரசு, அக்பர் அலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், திரளான தொண்டர்களும் உடனிருந்தனர்.

 

​நிகழ்ச்சியில் மணலூர் அரசு உரையாற்றுகையில், சமூக நீதி, சமத்துவம், பெண் விடுதலை மற்றும் சாதி ஒழிப்பு ஆகியவற்றுக்காக தந்தை பெரியார் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து, பெரியாரின் சமத்துவக் கொள்கைகளை முன்னெடுப்போம் எனப் பங்கேற்ற அனைவரும் உறுதியேற்று மரியாதை செலுத்தினர்.

 

​#PeriyarJayanti #Periyar147 #Vanapuram #Kallakurichi #TVK #VCK #SocialJustice #PeriyarBirthAnniversary

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்