மாபெரும் சோகம் ‘கானக்குயில்’ எஸ்.ஜானகி காலமானார் – இசை உலகம் கண்ணீர்!
மாபெரும் சோகம் ‘கானக்குயில்’ எஸ்.ஜானகி காலமானார் – இசை உலகம் கண்ணீர்!
தென்னிந்திய திரையிசையின் முடிசூடா ராணியாகவும், தனது தேனினும் இனிய குரலால் ஐந்து தலைமுறை ரசிகர்களைக் கட்டிப்போட்ட பெருமைக்குரிய “கானக் குயில்” எஸ்.ஜானகி (88) அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மைசூருவில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய இசை உலகையும் ஆழ்த்திய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின் ரிபேலே பகுதியில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்த எஸ்.ஜானகி, சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்டு முறையாகப் பயின்றார்.

1957 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “விதியின் விளையாட்டு” என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். மலரப் போகும் குழந்தை முதல் பழுத்த பழுத்த கிழவி வரை அனைத்து வயதினரின் குரலிலும் பாடி அசத்தும் அசாத்திய திறமை கொண்டவர்.
பாடல்களின் எண்ணிக்கை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஒடியா, துலு, பஞ்சாபி, வங்காளம், கொங்கணி மற்றும் ஜப்பானிய மொழி உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
4 தேசிய விருதுகள் மற்றும் தென்னிந்திய மாநில அரசுகளின் 30-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு அறிவித்த ‘பத்ம பூஷன்’ விருதை, மிகத் தாமதமாகத் தனக்கு வழங்கப்பட்டதாகக் கூறி, அதை ஏற்க மறுத்து தனது சுயமரியாதையை நிலைநாட்டினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்த ஜானகி அம்மா, அதன் பிறகு மைசூருவில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் இயற்கை எய்திய செய்தி கேட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் தங்களது ஆழந்த இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அவரது உடல் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் மறைந்தாலும் காற்றில் கலந்திருக்கும் அவரது தெய்வீகக் குரல் என்றும் அழியாது!
#SJanaki #SJanakiDemise #BreakingNews #GanaKuyilJanaki #SingerSJanaki #RIPJanakiAmma #MusicLegend #SouthIndianCinema #Kollywood #MelodyQueen





Comments are closed.