தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பம்: தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இணணைப்பு விழா!
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 10,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
மகாபலிபுரம் (ஓ.எம்.ஆர்):

மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான அவர்களின் வாழ்த்துக்களுடன், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூலை 2 (02.07.2026) வியாழக்கிழமை அன்று, சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ‘ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்’ (Four Points by Sheraton Resort & Convention Center) அரங்கில் மாற்றுக் கட்சியினர் தவெக-வில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் திரு. C. விஜயபாஸ்கர் மற்றும் திரு. M.R. விஜயபாஸ்கர் ஆகியோர் மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் MLA அவர்கள் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 10,000-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டு, பொதுச்செயலாளர் அமைச்சர் புசி ஆனந்த் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.
அமைச்சர்கள் பெருந்திரளாக பங்கேற்பு:
கழகத்தின் பலத்தையும், முக்கியத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில், தமிழக அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் பலர் முன்னிலை வகித்தனர்:
திரு. ஆதவ் அர்ஜுனா (மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்)
டாக்டர் K.G. அருண்ராஜ் (மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்)
திரு. K.A. செங்கோட்டையன் (மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்)
திரு. A. விஜய் தமிழன் பார்த்திபன் (மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்)
திரு. J. முகமது பர்வேஸ் (மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்)
திருமதி. G. ஜெகதீஸ்வரி (மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்)

திருமதி. C. விஜயலட்சுமி (மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர்)
திரு. S. ரமேஷ் (மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்)
திரு. P. மதன்ராஜா (மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்)
திரு. ஸ்ரீநாத் (மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்)
திரு. D. லோகேஷ் தமிழ்செல்வன் (மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்)
மேலும், இந்த விழாவில் கழகத்தின் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
”தலைவரின் வழிகாட்டுதலோடு தமிழகத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் சக்தியாக தவெக உருவெடுத்துள்ளது” என இந்த நெகிழ்ச்சியான தருணத்தை அமைச்சர் புசி ஆனந்த் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களின் இந்த வருகையும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் இணைப்பும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு மிக பலமான அடித்தளமாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

#தமிழகவெற்றிக்கழகம்
#தவெக
#TVK
#TVKParty
#BussyAnand





Comments are closed.