- Advertisement -

திருச்சியில் களைகட்டும் “கல்வித்திருவிழா – 2026”: காமராஜர் பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு!

- Advertisement -

​திருச்சியில் களைகட்டும் “கல்வித்திருவிழா – 2026”: காமராஜர் பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு!

 

​பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடார் மகாஜன சங்கம் (NMS) மாநிலம் தழுவிய அளவில் ஏற்பாடு செய்துள்ள “கல்வித்திருவிழா – 2026” மற்றும் காமராஜர் பேச்சுப்போட்டி, திருச்சி மாவட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன்

திருச்சி மண்டல தலைவர் பாலாஜி சுப்பிரமணியன் அவர்களின் தலமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

Vagai

​கல்வியாளரும், தியாக சீலருமான காமராஜர் அவர்களின் புகழைப் போற்றும் வகையிலும், பள்ளி மாணவர்களின் மேடைப் பேச்சினை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை இப்ப போட்டியில் பங்கேற்கச் செய்யும் வகையில், திருச்சி மண்டல தலைவர் பாலாஜி சுப்பிரமணியன் அவர்கள், பல்வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி, மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

 

​போட்டிப் பிரிவுகள் மற்றும் தலைப்புகள்:

 

​6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பின்வரும் தலைப்புகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்:

 

​6, 7, 8-ஆம் வகுப்புகள்: “பசிப்பிணி போக்கிய கல்விக்கடவுள்” (அ) “தியாக சீலர் காமராஜர்”.

 

Bismi

​9, 10-ஆம் வகுப்புகள்: “காமராஜரின் சொல்லும் செயலும்” (அ) “உழவும் தொழிலும் வளர்த்த உத்தமத்தலைவர்”.

 

​11, 12-ஆம் வகுப்புகள்: “சமதர்ம சமுதாயம் கண்ட காமராஜர்” (அ) “காமராஜரின் அரசியல் பணியும் ஆட்சிப்பணியும்”.

 

​பரிசுகள் மற்றும் இறுதிப்போட்டி:

 

​மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், ஜூலை 15, 2026 அன்று விருதுநகரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தலா ரூ. 50,000, ரூ. 30,000 மற்றும் ரூ. 20,000 என முறையே முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

 

​தொடர்புக்கு:

 

​திருச்சி மாவட்டப் பள்ளி மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பெருந்தலைவர் காமராஜர் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பறைசாற்ற முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போட்டி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளுக்கு, திருச்சி மண்டல தலைவர் பாலாஜி சுப்பிரமணியன் அவர்களை 9345125278 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

​#TrichyNews #KalviThiruvizha2026 #KamarajarSpeechCompetition #NMS #EducationEvents #TrichyStudents #KamarajarBirthday #தருச்சி #கல்வித்திருவிழா #காமராஜர் #பேச்சுப்போட்டி

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்