- Advertisement -

தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாள்: திருச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கல்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாள்: திருச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கல்!

 

​திருச்சி, ஜூன் 21, 2026:

 

​தமிழக வெற்றிக் கழக நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

Vagai

​இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி N. ஆனந்த் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, கழக முன்னோடியும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி N. நடராஜன் அவர்களின் தலைமையிலும், திருச்சி மத்திய மாவட்ட தலைவர் M. செந்தில் அவர்களின் முன்னிலையிலும், வெல்லமண்டி N. ஜவஹர்லால் நேரு அவர்களின் சிறப்பான ஏற்பாட்டிலும் ஏழை எளிய மக்களுக்கான நலப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 

Bismi

​அரசு பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு:

 

திருச்சி அரசு பொது மருத்துவமனை (GH) அருகே அமைந்துள்ள அரசு பார்வையற்றோர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குச் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. கழக நிர்வாகிகளின் சார்பில் அன்போடு பரிமாறப்பட்ட இந்த உணவினை மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

 

​இந்த நிகழ்வில், பகுதி கழக செயலாளர்கள் விஜய் மற்றும் வட்ட கழக செயலாளர்களின் நேரடி மேற்பார்வையில் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதில் திரளான தவெக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​தலைவர் சி.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை மக்கள் நலப்பணியோடு கொண்டாடிய கழகத்தினரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

​#தமிழகவெற்றிக்கழகம் #TVK #Vijay #ThalaivaVijay #ThalapathyBirthday #Trichy #TVKParty #தமிழகவெற்றிக்கழகம் #திருச்சி #வெற்றிக்கழகம்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்