- Advertisement -

திரையரங்குகளுக்கு அதிரடிச் சலுகை: புதிய தமிழ்ப் படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி!

- Advertisement -

திரையரங்குகளுக்கு அதிரடிச் சலுகை: புதிய தமிழ்ப் படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி!

 

​சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து முதல் ஏழு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் (5 Shows) திரையிட தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

 

​இது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Vagai

​பின்னணி:

 

​கடந்த 16.05.2026 அன்று திரைப்படத் துறையினர் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் முக்கியமாக, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதிக்குமாறு கோரியிருந்தனர்.

 

இக்கோரிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் கனிவோடு பரிசீலித்து இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

 

​விதிமுறைகளில் மாற்றம்:

 

​1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், இதுவரை நாளொன்றுக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி இருந்தது. உள்ளூர் பண்டிகை அல்லது பொது விடுமுறை நாட்களில் சிறப்பு அனுமதியாக 5 காட்சிகள் திரையிட மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகர காவல் ஆணையரிடம் தனியாக அனுமதி பெற வேண்டியிருந்தது.

Bismi

​தற்போது இந்த விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

புதிய உத்தரவின்படி:

​புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முதல் 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடலாம்.

​உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

​தனியாக அனுமதி பெறத் தேவையில்லை:

 

​இந்தக் குறிப்பிட்ட நாட்களில் 5 காட்சிகள் திரையிடுவதற்கு, அரசிடமோ அல்லது உரிமம் வழங்கும் மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகளிடமோ இனி தனியாக அனுமதி பெறத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

​அரசின் இந்த அதிரடி அறிவிப்பு தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

 

​#TamilCinema #CinemaUpdate #TamilNaduGovernment #CMVijay #TheatreShows #5ShowsPermitted #KollywoodNews #TNGo #TamilMovies #TheatreOwners #CinemaNews #TrendingTamil

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்