திருச்சி தேர்தல் களம்: தபால் வாக்குகளில் திமுக 3 இடங்களில் முன்னிலை; லால்குடியில் கடும் போட்டி!
திருச்சி தேர்தல் களம்: தபால் வாக்குகளில் திமுக 3 இடங்களில் முன்னிலை; லால்குடியில் கடும் போட்டி!
திருச்சி | மே 4, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் (Postal Ballots) எண்ணப்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, துறையூர், மணச்சநல்லூர் மற்றும் லால்குடி ஆகிய தொகுதிகளின் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

இதில் திமுக கூட்டணி 3 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
முசிறி: யோகநாதன் முன்னிலை
முசிறி தொகுதியில் அதிமுக வேட்பாளர் யோகநாதன் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வருகிறார்.
- அதிமுக (யோகநாதன்): 30
- திமுக (கருணை ராஜா): 25
- த.வெ.க (விக்னேஷ்): 25 இங்கு அதிமுக 5 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் திமுக-விற்கு இணையான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துறையூர்: கை சின்னம் முன்னிலை

தனித் தொகுதியான துறையூரில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
- திமுக (லெனின் பிரசாத்): 30
- அதிமுக (சரோஜா இளங்கோவன்): 25
- த.வெ.க (ரவிசங்கர்): 20 காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் 5 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளார்.
மணச்சநல்லூர்: கதிரவன் அதிரடி முன்னிலை
மணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவன் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
- திமுக (கதிரவன்): 40
- த.வெ.க (சரவணன்): 30
- அதிமுக (பரதன்): 20 இங்கு அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. த.வெ.க வேட்பாளர் சரவணன் 30 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
லால்குடி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் ‘திக் திக்’ நிமிடம்
லால்குடி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.
-
- திமுக (பாரிவள்ளல்): 35
- அதிமுக (லீமா ரோஸ் மார்ட்டின்): 34 வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பாரிவள்ளல் தற்காலிக முன்னிலையில் உள்ளார். எந்த நேரத்திலும் இந்த நிலவரம் மாறலாம் என்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
முக்கிய குறிப்பு: இவை தபால் வாக்குகளின் ஆரம்பகட்ட நிலவரங்களே. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும்போது முடிவுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.





Comments are closed.