மணச்சநல்லூர் மும்முனைப் போட்டி, அனுபவம் VS இளைஞர் சக்தி – யாருக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவு?
திருச்சி, மார்ச் 29: 2026
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தின் முக்கிய தொகுதியான மணச்சநல்லூரில் அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு, அத்தொகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1. தமிழக வெற்றிக் கழகம்:
‘புதுமுகம்’ சரவணன் – ரசிகர்களின் பலம் கைகொடுக்குமா?
த.வெ.க தலைமை, முன்னாள் மக்கள் இயக்க நற்பணி மன்றப் பொறுப்பாளர் சரவணன் அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு முன்பு ‘சரவணன் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கம் நற்பணி மன்றமாக மாறியது அப்போது மக்கள் இயக்க நற்பணி மன்றத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர், தற்போது விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சவால்கள்: ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவில் இவர் முகம் பரிச்சயம் இல்லாதது ஒரு பலவீனமாகக் கருதப்படுகிறது.
பலம்: தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் தெரிந்த விஜயின் மக்கள் இயக்க முன்னணி நிர்வாகிகள் மற்றும் த.வெ.க உறுப்பினர்கள் இவருக்குப் பின்னால் உள்ளனர்.
இவர்களின் தேர்தல் அனுபவமும், ‘தளபதி’ ரசிகர்கள் மீதுள்ள ஈர்ப்பும் வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின் ஓட்டுச் சேகரிப்பில் பெரிய வேகத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் மக்கள் இயக்க முன்னணி நிர்வாகிகளை சரவணனை அரவணைத்துச் செல்வார்களா என்பதே வெற்றியைத் தீர்மானிக்கும்.
2. சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம்: ஆர்.வி. பரதனின் சமுதாயப் பலம்!
அ.தி.மு.க-வில் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்ந்த தமிழக முத்தரையர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஆர்.வி. விஸ்வநாதன் அவர்களின் மகன் ஆர்.வி. பரதன், தற்போது சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் களம் இறங்குகிறார்.

தாக்கம்: மணச்சநல்லூர் தொகுதியில் கணிசமாக உள்ள முத்தரையர் சமுதாய வாக்குகளை இவர் பெரிய அளவில் கவர வாய்ப்புள்ளது.
த.வெ.க வேட்பாளர் சரவணனும்
அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமுதாய வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகம். தந்தையின் அரசியல் அனுபவம் மற்றும் சமுதாய ஆதரவு பரதனுக்குப் பெரிய பலமாக உள்ளது.
3. தி.மு.க: களம் காணும் முன்னாள் எம்.எல்.ஏ கதிரவன்!
ஆளும் கட்சியான தி.மு.க சார்பில், பொருளாதார ரீதியாக மிகவும் வலிமையானவராகவும், தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் அறியப்படும் கதிரவன் மீண்டும் களம் காண்கிறார்.
நிலைப்பாடு: ஏற்கனவே தொகுதியில் அறிமுகமானவர் என்பது இவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். அரசுத் திட்டங்கள் மற்றும் கட்சியின் கட்டமைப்பு இவருக்குச் சாதகமாக இருந்தாலும், புதிய கட்சிகளின் வருகை மற்றும் சமுதாய வாக்குகளின் மாற்றம் இவருக்குக் கடும் போட்டியை உருவாக்கும்.
எதிர்பார்ப்பும் யதார்த்தமும்
வேட்பாளர் சரவணன், த வெ க கட்சி, முக்கிய பலம்,
தமிழக வெற்றிக் கழகம் இளைஞர் மற்றும் ரசிகர் படை
ஆர்.வி. பரதன் சிங்கத் தமிழர் மு.க சமுதாயப் பின்னணி & தந்தையின் செல்வாக்கு
கதிரவன் தி.மு.க அரசியல் அனுபவம் & பொருளாதார வலிமை
மணச்சநல்லூரைப் பொறுத்தவரை, த.வெ.க வேட்பாளர் சரவணன் தனது இயக்க நிர்வாகிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்டால் மட்டுமே தி.மு.க மற்றும் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சவால்களைச் சமாளிக்க முடியும். அரசியல் அனுபவம் மிக்க கதிரவன் மற்றும் சமுதாய ஆதரவு கொண்ட பரதன் ஆகியோரை எதிர்த்து, ஒரு புதுமுகமாக சரவணன் எப்படிப் பணியாற்றுவார் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவு அமையும்.





Comments are closed.