- Advertisement -

ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் கார்-பைக் மோதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி

- Advertisement -

ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் கார்-பைக் மோதல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஒன்று கார் மோதி நசுங்கியது.

Vagai

​

Bismi

ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் உள்ள வளைவு பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று திரும்ப முயன்றது. அப்போது அதே சாலையில் வந்த ரெட் டாக்ஸி (Red Taxi) கார் எதிர்பாராத விதமாக மிக அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

 

இந்த மோதலில் இருசக்கர வாகனம் காரின் அடியில் சிக்கி (பலத்த சேதம்) நசுங்கியது. இருப்பினும், இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாக அமைந்தது.

​

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போக்குவரத்தை சீர்செய்து விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றினர். காரை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்