தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் மகளிர் தின விழாவில் அறிவித்த மிக முக்கியமான 12 அதிரடித் திட்டங்களின் தொகுப்பு இதோ:
1. பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்
தனி அமைச்சகம்: பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்புக்காகத் தனி இலாக்கா உருவாக்கப்பட்டு, அது விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும்.

ராணி வேலுநாச்சியார் படை: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 500 குழுக்கள் கொண்ட சிறப்புப் படை அமைக்கப்படும். இதில் உள்ள வீராங்கனைகள் சாதாரண உடையில் ‘பாடி கேம்’ (Body Cam) அணிந்து கண்காணிப்பில் ஈடுபடுவர்.
அதிவிரைவு நீதிமன்றங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரித்து உடனுக்குடன் தீர்ப்பு வழங்க ‘அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்’ அமைக்கப்படும்.
பாதுகாப்புத் தொழில்நுட்பம்: அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் அவசர காலப் பொத்தான்கள் (Panic Buttons) பொருத்தப்படும். மேலும், இருட்டான இடங்களே இல்லாத வகையில் ‘ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ்’ (Zero Dark Spots) மற்றும் 24/7 கண்காணிப்பு மையங்கள் உருவாக்கப்படும்.
2. நேரடி நிதி உதவித் திட்டங்கள்
மதிப்புமிகு மகளிர் திட்டம்: 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் (அரசு ஊழியர்கள் தவிர) மாதம் ரூ. 2,500 வழங்கப்படும்.

காமராஜர் கல்வி உறுதித் திட்டம்: 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க ஆண்டுக்கு ரூ. 15,000 உதவித்தொகை வழங்கப்படும்.
சுய உதவிக்குழுக்களுக்கு மானியம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். குழுவிலிருந்து குறு, சிறு நிறுவனங்களாக (MSMEs) மாறுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் 100% மானியமாக வழங்கப்படும்.
3. குடும்பம் மற்றும் அத்தியாவசியத் தேவைகள்
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
வெற்றிப் பயணம்: தமிழகத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் (சாதாரண மற்றும் விரைவுப் பேருந்துகள்) பெண்கள் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம்.
இலவச சானிட்டரி பேட்ஸ்: பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி பேட்ஸ் வழங்கப்படும்.
4. சுபநிகழ்ச்சி மற்றும் குழந்தை நலன்
அண்ணன் சீர் திட்டம்: பெண்களின் திருமணத்திற்கு தாய் வீட்டுச் சீதனமாக ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும்.
தாய்மாமன் தங்க மோதிரம்: தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் சார்பில் தங்க மோதிரம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள், உடைகள் அடங்கிய ‘பேபி வெல்கம் கிட்’ (Baby Welcome Kit) வழங்கப்படும்.





Comments are closed.