செம்பியன்மாதேவி ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழா முன்னிட்டு தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
செம்பியன்மாதேவி ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழா முன்னிட்டு தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செம்பியன்மாதேவியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது, ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் கேட்டை திருவிழா கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி துவங்கி சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கைலாசநாதர் தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக செண்டை மேளங்கள் முழங்க மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேர் செல்லும் வழிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.