“10 நிமிடங்கள் கொடுங்க சார்!” சுப்ரீம் கோர்ட்டில் கேட்ட குரல்.. தனி ஆளாக வாதாடி ஜெயித்த +2 மாணவன்

“10 நிமிடங்கள் கொடுங்க சார்!” சுப்ரீம் கோர்ட்டில் கேட்ட குரல்.. தனி ஆளாக வாதாடி ஜெயித்த +2 மாணவன்

 

மருத்துவச் சேர்க்கை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துவிட்டுக் கலையும்போது, ஒரு 19 வயது இளைஞரின் குரல் வந்துள்ளது. அந்த சாதாரணக் குரலும் அடுத்த 10 நிமிடங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களும் இப்போது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

யார் அந்த இளைஞர், சுப்ரீம் கோர்ட்டில் அவர் செய்தது என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

 

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு வழக்கு ஒன்றின் விசாரணையை முடித்துக் கலைந்து கொண்டிருந்தது. அப்போது, “மேலும் “10 நிமிடங்கள் கொடுங்கள் சார்” என்ற ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் மூத்த வழக்கறிஞர் உடையதோ அல்லது அரசியலமைப்பு வல்லுநர் உடையதோ இல்லை.. மாறாக ஜபல்பூரை சேர்ந்த 19 வயது அதர்வா சதுர்வேதி என்பவரது குரல் தான் அது.

 

அதர்வா சதுர்வேதி +2 வகுப்பு முடித்த சதுர்வேதிக்கு மருத்துவராக வேண்டும் என்பதே கனவு. அதற்கு ஒரு சிக்கல் வந்தபோது தான், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் 10 நிமிடம் கோரிக்கை விடுத்தார். அந்த 10 நிமிடம் அவரது வாழ்க்கையை மாற்றியது. இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சதுர்வேதிக்கு மருத்துவ சீட் வழங்க உத்தரவிட்டது.

Bismi

அதர்வா சதுர்வேதி சட்டப் படிப்பு படிக்கும் மாணவர் இல்லை. அவரது ஆசை மருத்துவராக வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் ஒரு முறை இல்லை.. இரண்டு முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும், அவரது மாநில அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. இதனால் இரு முறையும் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் தான் அவராகவே வாதாடி இருக்கிறார். அதில் தான் அவருக்குத் தற்காலிக எம்பிபிஎஸ் சீட் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதர்வா பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றாலும், மருத்துவத்தையே அவர் தேர்ந்தெடுத்தார். நீட்டில் இருமுறை தேர்ச்சி பெற்ற போதிலும், EWS இடஒதுக்கீட்டுக் கொள்கையை மபி அரசு அமல்படுத்தாததால் அவருக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக அவர், ஜபல்பூர் உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கிலும் கூட அதர்வா தனது வழக்கைத் தானே வாதடினார். அங்கு அதர்வாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை என்றாலும், “நீங்கள் ஒரு வழக்கறிஞராக வேண்டுமே தவிர, மருத்துவராக அல்ல. தவறான துறையில் இருக்கிறீர்கள்” என்று ஐகோர்ட் நீதிபதியே கூறியுள்ளார்.

 

 

தந்தை மனோஜ் சதுர்வேதிஅதர்வாவின் தந்தை மனோஜ் சதுர்வேதி  ஒரு வழக்கறிஞர்தான். ஆனால் அவர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது இல்லை. கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் இயங்கியபோது, அவரது தந்தை வீட்டில் இருந்தபடியே வாதிட்டார். அதைப் பார்த்தே சதுர்வேதி நீதிமன்றத்தில் எப்படி வாதிட வேண்டும் என்பதை கற்றுள்ளார்.

இது குறித்து தந்தை மனோஜ் கூறுகையில், “என் மகன் சட்டம் படித்ததில்லை.. ஆனால், அவன் அனைத்தையும் கவனித்தான். எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொண்டான். உண்மையில், மனுக்களை ஸ்கேன் செய்து பதிவேற்றுவது எப்படி என்பதை அவன்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தான்” என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்