திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர்கள்! யாருக்கு வாய்ப்பு?

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர்கள்! யாருக்கு வாய்ப்பு?

 

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் தமிழரசி சுப்பையா எம் ஏ எம் பில் பிஎச்டி, 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட வி.பத்மநாதன்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர்
டி.ரத்தினவேல்

திருச்சி மாவட்ட அதிமுகவின் முக்கிய நபரில் ஒருவர்
ஆவின் கார்த்திகேயன்,

பகுதிச் செயலாளர் பாண்டி,
டாக்டர் செந்தில், ராஜசேகர் ஆகியோர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விருப்பமுன்னு தாக்கல் செய்துள்ளார்கள்.

டாக்டர் தமிழரசி சுப்பையா
அதிமுகவில் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர், எம் ஏ எம் பில் பிஎச்டி முடித்தவர் பாரம்பரிய சித்த மருத்துவ பாரம்பரிய மருத்துவராக சித்தா ஆயுர்வேதா பதிவு பெற்ற மருத்துவர்

இவரது கணவர் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவ அணித் தலைவராக இருந்தவர்.
இவர் ஒரு சித்த மருத்துவர் மற்றும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.

டாக்டர் தமிழரசி சுப்பையா தேவர் இனத்தை சார்ந்தவர் திருச்சி மேற்கு தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர் முக்குலத்தோர் உள்ளனர், அதனை அறிந்து திருச்சி மேற்கு தொகுதியில் 2016 ஆண்டு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள் இவருக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கினார்கள்.
கட்சியில் சிலர் கொடுத்த அழுத்தத்தால்
கிழக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார்.

இவர் கழகத்திற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்கள் இவரும், இவர் கணவர் சுப்பையாவும் நடத்தி வருகின்றனர். அம்மாவின் ஒவ்வொரு பிறந்தநாள் போதும் பால்குடம் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றார்,

அம்மா ஸ்ரீரங்கம் வரும்போதெல்லாம் ஆயிரக்கணக்கான மகளிர் திரட்டி வரவேற்பு அளிப்பார், ஒரு முறை அம்மா அம்மா மண்டபம் ரோட்டில் காரை நிறுத்தி தமிழரசிக்கு வாழ்த்து வழங்கினார். இதுவரை திருச்சியில்
3550 இலவச மருத்துவ முகங்கள் நடத்தியுள்ளார், ஒவ்வொரு முகாமிலும் பெண்களுக்கு சேலை உணவு வழங்கப்படும். 1993 ஆண்டு கழகத்தில் இவர் இணைந்தார் 27 வருடம் தொடர்ந்து நலத்திட்டங்கள் நடத்தியுள்ளார், இடையில் இவருக்கு சிலர் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் திமுகவுக்கு சென்று மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பி வந்துவிட்டார் கட்சியினர் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர், இவரை மேற்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்தால் கட்சியில் பலரும் மகிழ்ச்சியுடன் களமிறங்கி வேலை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

 

 

வி.பத்மநாதன்
வி.பத்மநாதன் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மேற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார்.
2021 தேர்தலில் அவர் 33,024 வாக்குகளைப் பெற்றார் (தோராயமாக 18.04% வாக்குப் பங்கு பெற்றவர்), திமுக வேட்பாளரும் தற்போதைய அமைச்சருமான கே.என். நேருவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார்.

Bismi

அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார், திருச்சிராப்பள்ளி கூட்டுறவு நகர்ப்புற வங்கியில் இயக்குநராகவும் , தமிழ்நாடு நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் இயக்குநராகவும் பணியாற்றுவது உட்பட, கூட்டுறவு வங்கியில் தலைமைப் பாத்திரங்களை வகித்துள்ளார். அரசியலைத் தாண்டி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர், பட்டதாரி படித்தவர்,
திருச்சிராப்பள்ளி கருமண்டபம் பகுதியில் வசித்து வருகிறார்.

 

டி.ரத்தினவேல்
அதிமுகவின் முன்னாள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1991முதல் 1996 வரை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர்
டி.ரத்தினவேல்

அதிமுக (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) கட்சியில் திருச்சி பகுதியில் முக்கிய தலைவர்

தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி.) (2013-2019) பணியாற்றினார், ஜூலை 2019 இல் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது, ஜெயலலிதாவின் பங்களிப்புகளுக்கும் நன்றிக்கும் பெயர் பெற்றவர்,
எம்.பி.யாக இருந்த காலத்தில், சிறப்பாக பணியாற்றி பெயர் பெற்றவர்.

சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ)
1991 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக அமைப்புச் செயலாளராகப் பணியாற்றுகிறார். அவர் முன்னர் திருச்சி மாவட்ட அலகில் பல பதவிகளை வகித்துள்ளார்,
அவற்றுள் திருச்சி கிராமப்புற மாவட்டச் செயலாளர் .
எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் .
அம்மா பேரவையின் மாநிலச் செயலாளர் (1996–1999).
கட்சியின் நீண்டகால விசுவாசியாக அறியப்பட்ட இவர், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையில் அதன் தொடக்கத்தில் இணைந்தார்.

ராஜ்யசபாவில் அவர் பணியாற்றிய காலத்தில், திருச்சியின் வளர்ச்சி குறித்து அவர் குரல் கொடுத்தார், குறிப்பாக திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் திருப்பதிக்கு புதிய நேரடி ரயில் பாதைகள் மற்றும் கோல்டன் ராக் ரயில்வே பணிமனையை (GOC) மேம்படுத்த வேண்டும் என்று கோரினார்.

2026 ஆம் ஆண்டு கட்சியின் உள் இயக்கவியலில், அவர் எடப்பாடி
கே.பழனிசாமியின் (இபிஎஸ்) ஆதரவாளராகவே இருக்கிறார் , கட்சியின் அவரது தலைமைக்காக வாதிடுகிறார்.
வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் என்றாலும், 1974 முதல் திருச்சியில் குடியேறிவிட்டார்.

திருச்சியில் மிகவும் பிரபலமானவர் என்பதால் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தற்போது அதற்குண்டான களப்பணியை தயார் செய்து வருகிறார் என்று கூறுகிறார்கள்

 

ஆவின் கார்த்திகேயன்
ஆவின் கார்த்திகேயன்” (Engineer) திருச்சி மாவட்ட அதிமுகவின் முக்கிய நபரில் ஒருவராவார்.
இவர் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஆவின்) முன்னாள் தலைவராக (Chairman) பணியாற்றினார். 2018-ம் ஆண்டு இந்தப் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுகவின் வட்டச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.
தற்போது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

கட்சியின் மேல் இடத்தில் யாருக்கு தலைமை சீட்டு வழங்கினாலும் அனைவரும் ஒன்றிணைந்து அவரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று நிர்வாகிகளும் தொண்டர்களும், தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்