நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் பரணி செல்லத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொருளாளர் PPGD. சங்கர் அவர்கள் கடந்த 27.ம் தேதி அன்று கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்களுக்கு தமிழகத்தில் ஆளும் திறனற்ற தி. மு. க அரசின் அலட்சியப்போக்கே காரணம். தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், ஆளும் தி. மு. க அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் வேதாரண்யம் அம்பேத்கர் சிலைக்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகை மாவட்ட பட்டியல் அணி தலைவர் பரணி. செல்லதுரை தலைமையில் நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது மாவட்ட பொதுச் செயலாளர் இராம.வைரமுத்து நேதாஜி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.