- Advertisement -

பொங்கல் பரிசுடன் மஞ்சள் கொத்து வழங்க வேண்டும் -விவசாயிகள் எதிர்பார்ப்பு!

- Advertisement -

 பொங்கல் பரிசுடன் மஞ்சள் கொத்து வழங்க வேண்டும் -விவசாயிகள் எதிர்பார்ப்பு!

Bismi

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, மழையூர் உட்பட இதர பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக, சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் பயிர் அமோகமாக விளைந்துள்ளது. தமிழக அரசின் பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்குவது போல, மஞ்சள் கொத்து வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, திருமயம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 600 ஏக்கருக்கு மேல், பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் பயிர் அமோகமாக விளைந்துள்ளது.

மழையூரை சேர்ந்த விவசாயி சரவணன் கூறியதாவது:
மஞ்சள் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் வேண்டும். தற்போது பெய்த மழையால், மஞ்சள் அமோகமாக விளைந்துள்ளது.பொங்கல் பண்டிகை என்றாலே, பொங்கல் பானையில் மஞ்சள் கொத்து கட்டுவது; அலங்காரப் பொருளாக மஞ்சள் கொத்து கட்டப்படுவது வழக்கம்.இப்போது, ஜோடி 50 முதல், 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உற்பத்தி செய்பவர்களை விட வாங்கி, விற்பவர்களுக்கு தான் அதிக லாபம் கிடைக்கிறது.எனவே, தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்குவது போல, மஞ்சள் கொத்து வழங்கினால், பல விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்