நான் வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டியவர் விஜய்-செங்கோட்டையன் பேச்சு
நான் வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டியவர் விஜய்-செங்கோட்டையன் பேச்சு

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:
வழி தெரியாமல் நின்றபோது எனக்கு வழிகாட்டியவர் விஜய். என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான் என்று கூறி கண்கலங்கினார்.தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொன்னார்.இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை.கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா… கிருஷ்ணா… என்று இந்து மதம் சொல்லும்.கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி. கேட்காமலேயே கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்து இருக்கிறார்.தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார். புரட்சி தலைவி அம்மாவோடு பயணத்தை மேற்கொண்டேன் மகிழ்ச்சியாக இருந்தது.நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். அந்த அடையாளம் காட்டியவர் தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டி விட்டு சென்று விட்டார். கவலைப்பட தேவையில்லை.நல்ல இடத்துக்கு நீங்கள் போங்கள் என்று அடையாளத்தை காட்டி இருக்கிறார். அதற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.அவரோடு இருந்தால் இன்னும் பின்னுக்கு தள்ளி இருக்க முடியும். ஆனால் என்னை நீங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


Comments are closed.