தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

Bismi

பகுத்தறிவு பகலவன், பெண் உரிமை போராளி தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பி எம் ஆனந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்