தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா!

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா!

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.மேனாள் திருச்சி மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் தமிழரசி சுப்பையா,மருத்துவர் விஜய் கார்த்திக் முன்னிலையில், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத் தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூலினை அறிமுக படுத்தி

Bismi

பேசுகையில், நவநாகரீக உலகில் அறிவியல் வளர்ச்சியாலும், தொழில் நுட்பப் புரட்சியினாலும் புழங்கு பொருட்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றன அவ்வகையில் பாரம்பரிய புழங்கு பொருட்களை வெளிக்கொண்டு வருவதை நோக்கமாக இந்நூல் கொண்டுள்ளது பாராட்டுக்குரியது. புத்தக வாசிப்பு எழுத்து வடிவத் தகவலைக் கண்களால் கண்டு, அதன் பொருளை உணர்ந்து, மனதை வளப்படுத்தும் ஒரு செயல்பாடு ஆகும். இது மூளையைப் சுறுசுறுப்பாக்கி, நினைவாற்றலை அதிகரிப்பதுடன், தன்னம்பிக்கை, சிந்தனைத் திறன், சிக்கலைத் தீர்க்கும் ஆற்றல் போன்ற பல வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துகிறது. மேலும், அல்சைமர் போன்ற மறதி நோய்களைத் தடுக்கவும், புதிய மொழிகளைக் கற்கவும், கற்பனைத் திறனை வளர்க்கவும் உதவுகிறது, இதனால் வாசிப்பு என்பது மனதிற்கும் உடலுக்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும். வாசிப்பின் நன்மைகள் என்னவென்றால் மன ஆரோக்கியம் அதாவது மூளையை சுறுசுறுப்பாக வைத்து, அல்சைமர் போன்ற மறதி நோய்களைத் தள்ளிப்போடும்.நினைவாற்றல், கவனம், சிந்தனைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கும்.தெளிவாகப் பேசவும், தன்னம்பிக்கையுடன் செயல்படவும் உதவுகிறது.கற்பனைத் திறனை வளர்த்து, வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துகிறது.புதிய மொழிகளைக் கற்க உதவுகிறது. வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது மூளைக்கான உடற்பயிற்சி.வாசிப்புப் பழக்கம் இல்லாதது, புத்தகங்களை வாங்கி அடுக்கி வைப்பது மட்டும் போதாது, அவற்றைப் படிப்பதே முக்கியம்.குழந்தைகளிடமிருந்து வாசிப்புப் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப். பேராயம் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார்,ஐ.சி.எப். பேராயம் மாநில பொதுச் செயலாளர் பேராயர் ஆபிரகாம் தாமஸ், கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர், ஐ.சி.எப். பேராயம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அருள், போதகர் ஜான் டோமினிக், அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி மாநிலச் செயலர் இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் மகேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்