த.வெ.க தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

த.வெ.க தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட ,மாநகர ஆதி திராவிடர் நல குழு சார்பில் 35 வயதிற்கு குறைந்த இளைஞர்கள் 48 நபர்களை திமுகவில் இணைக்கும் விழா,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் திருச்சியில் நடைபெற்றது .தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி:

Bismi

எஸ்.ஐ.ஆருக்கு பணியாற்றியது போலவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட உள்ள நிலையில் தீவிரமாக பணியாற்றி நீக்கப்பட்டது யார் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பது விவரங்கள் குறித்து சேகரித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். மேலும் ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழக மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற விஜய், தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டு பேசினார்.

இது எனக்கு வருத்தம் அளிக்கிறது.அதிமுக ஆட்சி காலத்தில்

2017-18 ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் காலத்தில் தான் இடைநிற்றல் 16 சதவீதமாக இருந்தது.தற்போது அந்த சதவீதம் 7.7 ஆக உள்ளது.இந்த தகவல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வந்த செய்தி அப்போதே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.எனவே விஜய் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்