திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது!
திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது!
கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்!
திருநெல்வேலி,டிசம்பர் 18:-

சென்னையில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், அதிக அளவில் கேரளாவிற்கு, வட மாநில இளைஞர்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, நெல்லை ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சென்னை எக்மோரில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், நெல்லை ரயில்வே இருப்பு பாதை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், குழுக்களாக இணைந்து,நேற்று (டிசம்பர்.18) காலையில், திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில்,மூன்று வட மாநில வாலிபர்கள் சந்தேகப்படும் வகையில், அமர்ந்திருந்தனர். போலீசார் அந்த மூன்று பேர்களிடமும் நடத்திய விசாரணையில், கேரளாவிற்கு 18 கிலோ கஞ்சாவை அந்த மூவரும், கடத்தி கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அந்த வட மாநில வாலிபர்கள் மூவரையும், போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சா ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.