பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ வழங்கப்பட்டது.
Prime Minister Modi was awarded the ‘Order of Oman’, Oman’s highest civilian award.
பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ என்ற விருது வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் நாட்டுக்குச் சென்றார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதற்கிடையே, பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ என்ற விருது வழங்கப்பட்டது.இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இவ்விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

இவ்விருதை இருநாடுகளுக்கு இடையேயான பழங்கால நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் மற்றும் ஓமன் மக்கள் இடையேயான அன்பிற்கும், பாசத்திற்குமான மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓமன் அளித்த இந்த விருதுடன் சேர்த்து 29 வெளிநாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். சமீபத்தில், அவருக்கு எத்தியோப்பியா, குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா:
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஓமன் நாட்டின் இந்த உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது, அவரது சிறந்த ராஜதந்திரத்திற்கும், உலகளாவிய தலைவராக அவர் பெற்றுள்ள அங்கீகாரத்திற்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய சான்றாகும். பிரதமருக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் இத்தகைய சர்வதேச கவுரவங்கள், 140 கோடி இந்தியர்களின் வலிமையையும், அவரது தலைமையின் கீழ் இந்தியா அடைந்து வரும் மாற்றத்தையும் பறைசாற்றுகின்றன,என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments are closed.