மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!

ஒன்றே பாரதம் ஒன்றே நாடு ஒன்றே மக்கள் என்பதை பரையாற்றுகின்ற பரைசாற்றுகின்ற முகமாக இனிதே நடைபெற்று வருகிறது என சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு .

Bismi

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு:

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சொர்ணமாரன் அவர்களின் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு விழாவின் மூலமாக நாம் அஞ்சல்துறை பெருமை அடைகிறது .இந்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவச்சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்களோடும் நயினார் நாகேந்திரன் அவர்களோடும் இணைந்து மகாராஷ்டிர ஆளுனராக நான் என்னுடைய மரியாதையை செலுத்தினேன். அந்த நேரத்திலே ஸ்டாம்ப் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வந்தது. மதிப்புக்கும் மரியாதைக்கும் மனப்பூர்வமான பாசத்துக்கும் உரிய நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எத்தனையோ ஆட்சியாளர்கள் இருந்தாலும் ஆட்சியாளர்களில் மன்னர்கள் பலபேர் இருந்திருக்கிறார்கள். ஆனால் மன்னர்களில் மாமன்னர்களாக இருந்தவர்கள் ஒரு சில பேர்தான்.அந்த ஒரு சில பேரில் நம்முடைய பெரும்பிடுகு முத்தரையர் சொர்ணமாரன் அவர்கள் தனி சிறப்பு மிக்கவர். தமிழகம் என்று நாம் எடுத்துக் கொண்டோம் என்று சொன்னால் அந்த தமிழகத்தின் பசுமையான பகுதி திருச்சியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.பச்சை என்று சொன்னால் திருச்சி, தஞ்சாவூர் ,பெரம்பூர், திருவாரூர் என்று அது பறந்து வருகிறது.அந்த பகுதிகளில் பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய தமிழ் தாயினுடைய இதயமாக விளங்குகின்ற பகுதியை 45 ஆண்டு காலம் தோல்வியே காணாது வெற்றிகரமாக ஆண்ட ஒரே மாமன்னன் நம்முடைய பெரும்பிடுகு முத்தரையர்.அவரது ஆட்சி விரிவாக்கம் அதனுடைய ஸ்தரத்தன்மை ஆட்சியிலே இருந்த ஒரு வீரியம் மற்றும் அவருடைய கலாச்சார வளர்ச்சியை பேணி காக்க வேண்டும் என்கின்ற பங்கு 16 முக்கிய போர்களில் பங்கேற்று ஒரு போரிலே கூட தோற்கடிக்கப்படாத மகத்தான மாமன்னன் நம்முடைய பெரும்பிடுகு முத்தரையர்.

இவர் தன்னுடைய தந்தை மான் பரமேஸ்வரனுக்கு பிறகு கிபி-705ல் அரியணை

ஏறி 745 வரை மிகச்சிறப்பான ஆட்சியை நம்முடைய தமிழகத்தின் இதய பகுதிக்கு தந்திருக்கிறார்கள்.இப்படி மகத்தான வெற்றிகளை பெற்ற காரணத்தால்தான் அவருக்கு சத்துரு கேசரி, அபிமான தீரன்,ஸ்ரீ சத்துரு மல்லன் மற்றும் தஞ்சைக்கோன் போன்ற அளவில்லாத கௌரவ பட்டங்கள் அன்றைக்கே தரப்பட்டிருக்கிறது.

தமிழக வரலாற்றில் பொற்கால ஆட்சியை வழங்கிய தலைசிறந்த மன்னர்களில் முதன்மையாக முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ் வேந்தராக போர்க்களத்திலே எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூசூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் நம்முடைய பெரும்பிடுகு முத்தரையர்.

கலை மற்றும் விவசாயத்தின் பாதுகாவலராக தமிழ் மரபில் போற்றப்படுகின்ற மன்னர்களில் மகத்தானவராக செந்தலை,நார்த்தாமலை மற்றும் காவரி வடகறையில் உள்ள பல கல்வெட்டுக்கள் இவருடைய சாதனைகளை சரித்திர நிகழ்வுகளை பரைசாற்றிக் கொண்டிருக்கிறது. இவருடைய ஆட்சியில் கோயில்கள் பாசன பணிகள் தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் இவருக்கு இருந்த ஈடுபாடும் அதை அவர் வளர்த்த விதமும் இன்றைக்கும் தமிழனுடைய பழமையான கலாச்சாரம் உலகெங்கும் பரைசாற்றப்படுகிறது. நம்முடைய பெரும்பிடுகு முத்தரையர் மாமன்னர் 75வது சுதந்திர தின ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் கொண்டாடப்பட்ட நிகழ்வின் போதுதான் எண்ணற்றவர்கள் மறைந்து போனாலும் அவர்கள் புகழ் என்றைக்கும் இந்த மண்ணிலே மறையாமல் இருக்க வேண்டும்.நாட்டின் ஒரு பகுதியிலே மட்டும் இருந்தால் போதாது அவருடைய புகழ் இந்த மண்ணுக்காக செய்த மகத்தான சாதனைகள் , மகத்தான வீரம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் இந்த நிகழ்ச்சியை 75வது சுதந்திர தின ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்த்தை நாடு முழுவதும் கொண்டாட முடிவெடுத்தார்கள். நாடு முழுவதிலும் நம்முடைய மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரை போன்றவர்களுடைய புகழ் பரவுகிறது. ஒரு நாடு பாரம்பரியத்தை எப்பொழுது இழக்கிறது என்று சொன்னால் எப்பொழுது அணியினுடைய ஆட்சி இங்கே வந்துவிடுகிறதோ அப்பொழுது தன்னுடைய பாரம்பரியத்தை இழக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் நாம் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் அதிலும் குறிப்பாக மோடிஜி அவர்கள் மிகுந்த முன்னுரிமை தந்து இந்த நாட்டினுடைய பழைய பெருமைகளை எல்லாம் மேற்கொண்டு வர வேண்டும். மீட்டெடுத்து வருகின்ற பொழுதுதான் இளைஞருடைய மனதில் ஆழமான தேசபக்தி உணர்வு பரவும்.யார் ஒருவனுக்கு ஆழமான தேசபக்தி உணர்வு இருக்கிறதோ அவன் பொதுநலனிலே அக்கரை கொண்டவனாக மட்டும்தான் இருக்க முடியும் என்பதை உணர்ந்து அவர் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சிக்கும் நாம் அனைவரும் உறுதினாக இருக்க வேண்டும். அவர் எடுக்கின்ற அந்த முயற்சிகளில் 2014 முதல் இன்றைக்கு வரை கிட்டத்தட்ட 642க்கும் மேற்பட்ட கடத்தப்பட்ட சிலை உட்பட தொல்பொருள்கள் மீட்கப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.ஜூலை மாதம் கங்கைகண்ட சோழபுரத்திற்கு வருகைந்த பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்கள் ஆடி திருவாதிரை திருவிழாவில் பக்தர்களிடம் உரையாற்றினார். அது ஒரு புறத்தில் இன்னொரு புறத்தில் நம்முடைய அமைச்சர் முருகன்ஜி அவர்கள் கோடிட்டு காட்டியதை போல கடந்த நான்கு ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கம் என்கின்ற மகத்தான நிகழ்வை நிறுவி தமிழனுடைய புகழ் வடபுலத்திலும் எல்லோரும் உணர வேண்டும். காசி தமிழ் சங்கத்தினுடைய துவக்க விழா காசியிலே நடைபெற்றது நிறைவு விழா நம்முடைய பண்பாட்டினுடைய அடிப்படையில் ராமேஸ்வரத்தில் நடைபெற வேண்டும்.பல மன்னர்களால் இந்த தேசம் ஆளப்பட்டிருந்தாலும் பல்வேறு மொழி பேசுகின்றவர்களாக நாம் இருந்தாலும் நாம் அனைவரையும் ஒருங்கிணைப்பது அதுதான் தர்மம் இந்த நாட்டிற்கான தர்மம் பொதுவானது அதை காக்க வேண்டும். பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியின் வரலாறு கலாச்சாரம் மற்றும் மரபுகளை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் அதில் ஒரு அங்கமாகத்தான் இன்றைக்கு இந்த சிறப்பான மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சல் லை வெளியிட்டு விழா நிகழ்வு நடைபெறுகிறது.யாராவது ஒருவர் ஒரு முயற்சி எடுத்தால் தான் எந்த நல்லதுமே சமூகத்தில் அது நிறைவேற்ற முடியும்.ஒன்றே பாரதம் ஒன்றே நாடு ஒன்றே மக்கள் என்பதை பரையாற்றுகின்ற பரைசாற்றுகின்ற முகமாக இது இனிதே நடைபெற்று வருகிறது.தோன்றின் புகழோடு தோன்றுக என்றான் வள்ளுவன் அப்படி தோன்றிய அரசர்களில் ,பேரரசர் மன்னர்களில் மாமன்னர் நம்முடைய பெரும்பெடுகு முத்தரையர் சொர்ணமாரன் அவர்கள் அவருடைய வீரத்தையும் தீரத்தையும் போற்றுவது நம்முடைய மண்ணின் மாண்பை போற்றுவதாகும் . பேரரசர் பெரும்பெடுகு முத்தரையர் சொர்ணமாரன் அவருடைய புகழ் இந்த மண் இருக்கின்றவரை மனித குலம் இருக்கின்றவரை நீடித்து நிலைக்கும்.

இவ்வாறு கூறினார் .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்