ரஜினிகாந்த் நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார்- பிரதமர் மோடி பாராட்டு.
ரஜினிகாந்த் நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார்- பிரதமர் மோடி பாராட்டு.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,’ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துக்கள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Comments are closed.