ரேஷன் கடையே இல்லையா? -புதுச்சேரி அமைச்சர் கொடுத்த பதில்

ரேஷன் கடையே இல்லையா? -புதுச்சேரி அமைச்சர் கொடுத்த பதில்

புதுவை மாநிலத்தில் ரேஷன் கடையே இல்லை என்பதை போல ஒரு பொய்யான பரப்புரையை த.வெ.க தலைவர் விஜய் சொல்லியிருக்கின்றார்.

புதுவை மாநிலத்தில் இன்றைக்கு மத்திய அரசினுடைய அனுமதியோடு ,ஏற்கனவே ரேஷன் கடையில் அரிசுக்கு பதிலாக நேரடி பண பரிமாற்ற முறையின் மூலமாக பணமாக செலுத்தப்பட்டு வந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் முதலமைச்சரிடத்திலும் என்னிடத்திலும் நீங்கள் பணத்திற்கு பதில் எங்களுக்கு அரிசியாக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து

Bismi

உள்ளார் .அதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சரை அணுகி டிபிடி என்ற முறையிலிருந்து புதுவை மாநில மக்கள் அரிசியாக கேட்கின்றார்கள் அதை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக மத்திய அரசு ஒப்புதல் அளித்து இந்த திட்டமானது ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பாக நடந்து வருகிறது . ஆனால் த.வெ.க தலைவர் விஜய் , இங்கு ரேஷன் கடையே இல்லை என்பதை போல ஒரு பொய்யான பரப்புரையை சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார்.அந்த பரப்புரையில் உண்மை இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

குறிப்பாக மாநில அந்தஸ்தை பற்றி 16 முறை மத்திய அரசிற்கு சட்டசபையின் மூலமாக தீர்மானம் ஏற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டதாக கூறியிருந்தார் .

மாநில அந்தஸ்து என்பது இன்றைக்கு நேற்றைக்கு வந்த பிரச்சனை அல்ல. இது காலம் காலமாக இருக்கின்ற என்ற பிரச்சனை காங்கிரஸ் அரசாங்கம் மத்தியிலே ஆண்ட காலத்திலிருந்து மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசாங்கம் இருந்த காலத்திலிருந்தும் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த கோரிக்கையானது இப்பொழுதுதான் மத்திய அரசிடம் வைத்த மாதிரியும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்பதை போன்ற ஒரு தோற்றத்தை மத்திய அரசின் மீது குறை சொல்லுகின்ற ஒரு நிலையிலே விஜய் பேசி இருப்பது என்பது கண்டிக்கத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்