SIR பணிகள் இறுதி கட்டம், இன்றே கடைசி நாள்!

SIR பணிகள் இறுதி கட்டம், இன்றே கடைசி நாள்!

Bismi

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்தப் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இன்றுடன் இது நிறைவடைகிறது. இன்றைக்குள் படிவங்களை சமர்ப்பிக்காத வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. (1.1.2026) தேதியில் 18 வயது பூர்த்தியடைபவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கி ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்தப் பணிகள் இன்று (டிசம்பர் 11) முடிகின்றன. இதற்கிடையே கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி (நேற்று) வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று வரை 6 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 380 படிவங்கள், அதாவது 99.99 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 4,207 வாக்காளர்கள் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து தரவில்லை. மேலும், 6 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரத்து 413 படிவங்கள் அதாவது 99.95 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளுக்கு 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். 2.46 லட்சம் அரசியல் கட்சி முகவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்று நிறைவடைந்ததும் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்குவார்கள். அவர்களும், தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் விடுபட்டுவிடாதபடி ஆய்வு செய்வார்கள். இந்த நிலையில் 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களுக்கு 6-ம் எண் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்க தொடங்கிவிட்டனர். 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகங்களுக்கான இணையதளத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களின் பெயர் விவரங்களை சரிபார்க்க வேண்டும். அந்த பணியை எளிதாக்கும் வகையில், வாக்காளர் தனது அடையாள அட்டையின் நம்பரை பயன்படுத்தி, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை தேடுவதற்கான வசதியையும் தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்