தி.மு.க.வில் எத்தனை அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது -எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வில் எத்தனை அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது -எடப்பாடி பழனிசாமி

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

Bismi

தி.மு.க.வில் உள்ள எத்தனை அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.தி.மு.க.வில் ஊழல் வழக்கு உள்ள அனைத்து அமைச்சர்களும் பத்திரமான இடத்தில் இருப்பார்கள்.போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல்.

தி.மு.க ஆட்சியில் விலை நிலவரத்திற்கு பதிலாக கொலை நிலவரம் கேட்டுகும் நிலையில் தி.மு.க ஆட்சி இருக்கிறது.

கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்? யாரையோ காப்பாற்றுவதற்காக இந்த அரசு துடித்துக்கொண்டிருக்கிறது.
கள்ள ஓட்டுக்களால் தி.மு.க. வெற்றி பெற்றதால் SIR என்றாலே அலறுகிறார்கள்.
வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது.
இறந்தவர்களின் பெயர், இரட்டைப் பதிவு கொண்டோர் தான் நீக்கப்படுகின்றனர்.
தி.மு.க. கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் முதலமைச்சரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.பா.ஜ.க. குறித்து சிறுபான்மையினரிடம் சந்தேகம் உள்ளது, அதை முறியடிக்குமாறு கலைஞர் கூறினார்.அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு நடந்த போது கீழ் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தி.மு.க. என்பது ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.அமைச்சர் துரைமுருகனும் எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர் தான்.
அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் பதவியில் அமர முடியும்.
இந்த கூட்டத்தில் உள்ள பல பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு விழக் கூடிய வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்