படையப்பா ரீ ரிலீஸ்! ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்!

படையப்பா ரீ ரிலீஸ்! ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்!

Bismi

நடிகர் ரஜினி தயாரித்து, நடித்த படையப்பா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.

கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை பற்றியும் நினைவுகள், அனுபவம் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொள்ளளர், படத்தை பிரமோஷன் பண்ணும் விதமாக வீடியோவை சௌந்தர்யா ரஜிகாநாத் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் படையப்பா ரீ ரிலீஸ் ஆவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படம் படையப்பா.
அதில் பேசிய ரஜினி, முதல் பாகத்திலேயே நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தற்போது எல்லாமே 2.0 என எடுக்கிறார்கள். அதேபோல் ஏன் படையப்பா 2 எடுக்கக் கூடாது எனத் தோன்றியது. நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா 2 படத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம். எல்லாம் சரியாக அமைந்தால், படம் நிச்சயமாக வரும். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்