நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி மனு – திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி மனு – திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில்

அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன.இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் ‘இம்பீச்மெண்ட்’ செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் தீர்மானத்தை கொண்டு வர கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய
வேண்டும் எனில், நாடாளுமன்றத்தில் மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் ஆதரவு தேவை. இல்லையெனில், மாநிலங்களவையில் 50 எம்பிக்களின் ஆதரவு தேவை.நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 150 மக்களவை எம்பிக்கள் கையொப்பமிட்ட தீர்மான கடிதத்தை டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், எம்.பி. கனிமொழி, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர்.சுவாமிநாதன் பதவிநீக்கம் செய்யப்படுவாரா? ஒருவேளை இந்த தீர்மானம் ஏற்கப்பட்டால், மூன்று பேர் கொண்ட குழு நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று விசாரணைக் குழு உறுதி செய்யும்பட்சத்தில் நாடாளுமன்ற அவையில் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறும். இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிப்பார். அப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இம்பீச்மெண்ட் முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயரை ஜி.ஆர். சுவாமிநாதன் பெறுவார்.


Comments are closed.