பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!

 திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியுள்ளது.

Bismi

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில்

பாஜ, இந்து முன்னணி அமைப்பு உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர் மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டும் என்ற திமுக எம்பிக்களின் கோரிக்கையை ஏற்க லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்தார். அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் இவ்விவகாரம் அரசு சார்ந்த விவகாரம் கிடையாது எனக்கூறி விவாதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே பேசிய டி.ஆர்.பாலு, திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த கவலை அளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். தனிநீதிபதி அளித்த தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்றார். டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, நீதிபதி சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதற்கு மத்திய அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்தார். இதனிடையே நீதிபதி சாமிநாதன் குறித்த டி.ஆர்.பாலுவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.- பா.ஜ.க. எம்.பி.க்கள் மாறிமாறி கோஷமிட்டனர். இதனால், அவையில் கூச்சலில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக எம்பிக்கள் கொடுத்த ஒத்திவைப்பு நோட்டீஸை ராஜ்ய சபா சபாநாயகரான துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட திமுக எம்பிக்கள், அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்