உடல்நலக்குறைவால் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்.
உடல்நலக்குறைவால் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்.

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் நேற்று (டிசம்பர் 4) சென்னையில் காலமானார்.
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவன உரிமையாளர் சரவணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனார். மறைந்த ஏ.வி.எம். சரவணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது.வயது மூப்புக்காரணமாக ஓய்வில் இருந்து வந்த இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் ஏ.வி.எம். சரவணன். அவரின் மறைவையொட்டி, முதல்வர் ஸ்டாலின், வைகோ மற்றும் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ரஜினி காந்த், விஷால் உள்ளிட்டோர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் இதுவரை 180-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறது. மேலும் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடரையும் தயாரித்து உள்ளது. இதன் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவர்தான் ஏவிஎம் சரவணன். தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளார். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார். வெள்ளை நிற ஆடையை அணிவது அவரது அடையாளமாக இருந்தது. அவரது மறைவுக்கு தமிழ் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Comments are closed.