மகாதீபத்தை காணம் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

மகாதீபத்தை காணம் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

மகாதீப திருவிழாவை ஒட்டி பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை நகரமே கலைகட்டி உள்ளது. பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?விவரங்கள்:

Bismi

மகாதீபத்தை காண லட்சக்கணக்கானோர் கூடும் நிலையில் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதியை எளிமைப்படுத்த திருவண்ணாமலை புறநகர் பகுதியில் 24 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் ரோடு பகுதியில் மூன்று இடங்களிலும் ,திண்டிவனம் ரோட்டில் ,திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வேட்டவளம் ரோடு, திருக்கோவிலூர் ரோடு, மணலூர்பேட்டை ரோடு, தண்டராம்பட்டு ரோடு பகுதியிலும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கம் ரோடு பகுதியில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் அன்னதானம் வழங்கப்படும் இடங்களிலேயே சாப்பிட வேண்டும். நடந்து கொண்டே சாப்பிடக்கூடாது. கழிவுகளை கூடையில் மட்டுமே போட வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. நான்கு கோபுரங்கள் முன்பும் கிரிவல பாதையிலும் கற்பூரம் ஏற்றக்கூடாது என கூறியிருக்கிறார்கள் அம்மாவட்ட காவல்துறை கிரிவல பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் தடை விதித்திருக்கிறது. பக்தர்கள் தங்கள் காலணிகளை நான்கு கோபுரங்களின் முன்பும் மாட வீதிகளிலும் விடக்கூடாது. கடைகள் அல்லது தற்காலிக பேருந்து நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காலணி பாதுகாப்பகங்களில் விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்தும் இடங்களை பக்தர்கள் அறிய காவல் துறையின் வாட்ஸ் ப் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கோயில் மற்றும் கிரிவல பாதைக்கு அருகில் வரை கட்டணமெல்லா இலவச பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 20 கட்டணமெல்லா தனியார் பேருந்துகளும், 200 கட்டணமெல்லா கல்வி நிறுவன பேருந்துகளும்,10 பயண கட்டணத்துடன் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். கூட்டத்தில் திடீரென யாராவது காணாமல் போனால் அது குறித்து தெரியப்படுத்தும் வகையில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. உடல்நல குறைவு ஏற்பட்டால் அவசர ஊர்தி உதவி எண்

102 ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் சக்கரகுடம் இந்திரலிங்கம் கற்பக விநாயகர் கோயில் சந்திப்பு அக்னிலிங்கம் மகாசக்தி மாரியம்மன் கோவில் நிறுதிலிங்கம் உள்ளிட்ட 10 இடங்களில் தரிசனத்திற்காக பக்தர்கள் அதிக நேரம் நிற்க கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்