டிட்வா புயல் வேதாரண்யத்தை நெருங்கியது!

டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா” புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் 60 வகையான பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து தரைக்காற்று வீசியது. தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு – வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 8 கி.மீ. வேகத்தில் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. இலங்கைக்கு (யாழ்பாணம்) கிழக்கே 80 கி.மீ., புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் இருக்கிறது. டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து 60 கி.மீ., 50 கி.மீ., 25 கி.மீ. என மையம் கொள்ளும். நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ. தூரத்தில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Comments are closed.