திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

 

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சந்தையாக காந்தி சந்தை இருந்து வருகிறது திருச்சி மாவட்டம் மக்கள் மட்டுமல்லாது திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தினந்தோறும் காந்தி மார்க்கெட்டிற்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள் காந்தி மார்க்கெட்டில் தற்போது தக்காளி விலை அதிகரித்துள்ளது 20 நாட்களுக்கு முன்பு 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

 

Bismi

காந்தி மார்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தக்காளி கொண்டு வரப்படும். தற்போது

வடமாநிலங்களில் நிலவும் அதிக அளவு பனி மற்றும் மழை காரணமாக அங்கு தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவே வட மாநில சேர்ந்த வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்கிறார்கள் இதனால் தமிழ்நாட்டிற்கு வரத்து குறைந்துள்ளது எனவே தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் அதேபோல அங்கு தக்காளி வாங்க வந்த மக்களும் மார்க்கெட்டிற்கு வெளியே உள்ள கடைகளில் ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது அதனால் காந்தி மார்க்கெட்டிற்கு வந்து வாங்குகிறோம் இங்கும் 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்