த.வெ.க உடன் கைகோர்ப்பது உறுதி- துக்ளக் ரமேஷ்
த.வெ.க உடன் கைகோர்ப்பது உறுதி- துக்ளக் ரமேஷ்
துக்ளக் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மறைந்த முதலமைச்சர் அம்மா ஆகிய இருவரும் தலைவர்களுடைய நம்பிக்கைக்குரியவராக திகைந்த திரு செங்கொடையன் அவர்கள் அவரோடு எனக்கு கிட்டத்தட்ட ஒரு 42 ஆண்டுகளாக மிக நெருக்கமான தொடர்பு உண்டு அந்த வகையிலே அவரை குறித்து கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிற செய்திகள் அது பற்றி அவரோடு பேசுவதற்காக நான் இன்றைக்கு அவரை சந்தித்தேன். அவருடைய ஆதரவாளர்கள் ஈரோடு மாவாட்டத்தை சேர்ந்தவர்கள் அதேபோல தமிழகம் முமுவதும் இருக்கக்கூடிய அவரது அரசியல் நலம் விரும்பிகள் தமிழக வெற்றிக் கழகதில் அவர் இணைய வேண்டும். அவருடைய அரசியல் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தி அந்த பயணம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை சிலரோடு பேசியதன் மூலன் நான் அறிந்து கொண்டேன்.ஆகவே உங்களைப் போலவே நாளைய தினம் அவர் தமிழக வெற்றிக் கழகத் தில் இணையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே நான் பார்க்கிறேன். தமிழக வெற்றிக் கழகம் நிச்சியமாக அந்த கட்சியினுடைய வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான கருவியாக திரு செங்கொடையன் அவர்கள் இருப்பார் என்று நான் திடமாக நம்புகிறேன்.அது தவிர திரு செங்கொடையன் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு அவருக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவம் அல்லது பொறுப்பு கௌரவம் ,

அதை பார்த்து அண்ணா திராவிட முன்னேற்ற காயகத்தில் இருக்கக்கூடிய அதிருப்தி மனநிலையில் இருக்கக்கூடியவர்கள் சிலர் அவருடைய முடிவை பின்தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நான் பார்க்கிறேன். இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் என்பது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு போட்டியாக தேர்தல் களத்தில் சொல்லப்போனால் பிரதான போட்டியாளராக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சமமான வலிமையோடு திகழ்கிற ஒரு அரசியல் சக்தியாக இருக்கிறது சில பகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை விட தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூடுதலான ஆதரவு இருப்பதாக எனக்கு தெரிந்த கருத்து கணிப்புகளை நடத்துகிற ஒன்று ரெண்டு நண்பர்கள் தெரிவிக்கிறார்கள் . ஆகவே அதேபோல சமீப காலமாக திரு விஜய் அவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுடைய பெருமையை உச்சரிப்பதற்கு அந்த பற்றி பேசுவதற்கு தொடங்கி உள்ளார் . அதன் மூலம் அண்ணா திமுகாவிலே இருக்கக்கூடிய தொண்டர்கள் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதேபோல அதிருப்தியிலே இருக்கக்கூடிய புலிகள் இவர்களுடைய பார்வையும் விஜய் பக்கம் திரும்பும் மேலும் சிலர் அடுத்தடுத்த நாட்களில் இணையக்கூடிய வாய்ப்புகளும் இருக்கும் என்று நான் நினைக்குறேன் .
நீங்கள் நேரடியா பார்த்து என்ன பேசுனிங்க கேள்விக்கு திரு செங்கொடையன் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கக்கூடிய விருப்பத்தகாத நிலையை குறித்து என்னிடம் தெரிவித்தார் .
திரு செங்கொடையன் அவர்களுக்கு நெருடல் இருக்கிறதா ? இல்லை அந்த நெருடல் என்பது நேர் எதிர்நிலையிலே இருக்கக்கூடிய கட்சிலே சேர்ந்தால் அந்த நெருடல் ஏற்படுவது இயற்கை .ஒரு உதாரணத்திற்கு சொல்வதானால் அதிமுக என்பது திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து அதனுடைய பாதையை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம்.அந்த இயக்கத்தில் சேர்கிற முடிவை எடுத்தால் நீங்கள் சொல்கின்ற நெருடல் என்பது ஏற்படும். தவெக என்பது திராவிட முன்னேற்ற கழகத்தை கூர்மையாக எதிர்க்கக்கூடிய மற்றொரு இயக்கம் அதிலே இணைவதில் எந்த நெருடலும் கிடையாது.அவருடைய அரசியல் அனுவத்தை தவெக பயன்படுத்திக் கொள்வது அந்த கட்சினுடைய வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது என்று நான் பார்க்கிறேன் என கூறினார் .


Comments are closed.