ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு!
நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு!
நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவம்பர் 22:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு,(நவம்பர் 21)காலையில், தன்னுடைய சொந்த தொகுதியான, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், “கூட்டப்புளி” மீனவக் கிராமத்தில்,1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான, “கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டு மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம்” அமைக்கும் பணி,”கூத்தன்குழி” மீனவக்கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான “மீன் இறங்கு தளம்” அமைக்கும் பணி, “விஜயாபதி” மீனவக் கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான “சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கம் மற்றும் பயிற்சி மையம்” ஆகியவற்றிற்கான கட்டுமானப் பணிகள் என, மொத்தம் 18 கோடியே 95 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்”சி.ராபர்ட் புரூஸ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில், “அடிக்கல்” நாட்டினார்.இந்த நிகழ்ச்சிகளில் பேசிய, சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டதாவது:-
“திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியானது, அதிகமான மீனவ மக்களை கொண்ட தொகுதி ஆகும். இங்கு கூடுதாழை, கூட்டப்புளி, கூட்டப்பனை, கூத்தன்குழி, உவரி, தோமையர்புரம், இடிந்தகரை, பெருமணல், விஜயாபதி உள்ளிட்ட, கடலோரக் கிராமங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு, மீனவ மக்களின் நலன்களை, பேணிப்பாதுகாக்கும் அரசாக, “முதலமைச்சர்”மு.க. ஸ்டாலின் தலைமையிலான “தமிழ்நாடு அரசு” செயல்பட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தொழில் வளத்தை பெருக்கிடவும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்திடவும், பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை உருவாக்கி, அவற்றை உரிய காலங்களில் செயல்படுத்திடவும், இந்த அரசு பாடுபட்டு வருகிறது.
அதன் ஒருபகுதிதான், இங்கு “அடிக்கல்” நாட்டப்பட்ட மேம்பாட்டுத்திட்டங்கள் ஆகும்!”- இவ்வாறு, சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சிகளில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, அருட்தந்தையர்கள் ஆல்பின், ரிக்ஸன், உதவி செயற்பொறியாளர் அன்னபூரணி அம்மையார், இளநிலை பொறியாளர் அருண்குமார் கவுதம், கூத்தன்குழி ஊராட்சி மன்றத்தலைவி வளர்மதி, விஜயாபதி ஊராட்சி மன்றத்தலைவர் சகாய பெப்பின் ராஜ் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.