திமுகவினருக்கு தமிழக வெற்றி கழகம் என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது-டி டி வி தினகரன்.
திமுகவினருக்கு தமிழக வெற்றி கழகம் என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது-டி டி வி தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பேட்டி:
எஸ்.ஐ.ஆர் குறித்து எங்கள் நிர்வாகிகள் கண்காணித்து தான் வருகிறார்கள்.

இது திமுகவை ஆதரித்து சொல்லவில்லை. எல்லாக் கட்சிகளுமே சரி பார்க்கிறார்கள்.
93 சதவீதம் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.ஓட்டு உரிமை பெற்று தருவதற்காக அரசியல் கட்சியினர் தங்களது கடமையாக செய்து வருகிறார்கள். தேர்தல் கமிஷன் கொண்டு வருவதை அரசாங்கம் செய்யவில்லை என்றால் தவறாக போய்விடும் அது சரியாக தான் நடந்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். நெல் ஈரப்பதம் 22 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு.இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ளது. மத்திய அரசாங்கம் மனது வைத்து விவசாயிகள் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு 22 சதவீத ஈரப்பதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநிலங்களில் எந்த அரசாங்கம் இருப்பதை தாண்டி விவசாய நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் உயர்த்த வேண்டும் இது விவசாயிகளின் கோரிக்கை.இது திமுக கோரிக்கை இல்லை.கோவை மெட்ரோ ரயில் திட்டம் எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவது என்பது கண்டனத்துக்குரியது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் போக்குவரத்து நெரிசல் மக்கள் தொகை கணக்கில் கொண்டு மத்திய அரசு வளர்ந்த மாநகரங்களுக்கு இப்போதே திட்டமிட்டு மெட்ரோ கொண்டு வர வேண்டும்.தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கவழக்கம் மதுவை தாண்டி கொலை கொள்ளைகள் அதிகரித்து வருகிறது இது தமிழ்நாடு அரசாங்கம் காவல்துறை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இன்னும் தீவிரமாக செயல்படவில்லை என்றால் தேர்தலில் எதிரொலிக்கும். எங்களது கூட்டணி அமைந்தவுடன் சொல்கிறேன். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றுதான் நம்பகத் தன்மையாக இருந்தது அது பீகாரில் வெற்றி பெற்றது வாழ்த்துக்கள்.
திமுகவினருக்கு தமிழக வெற்றி கழகம் என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. 2026 மே மாதம் யார் வெற்றி பெறுவார்கள் என் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.
லஞ்சம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் இது எல்லோருடைய கருத்து.அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெறும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் கூட்டணியாக இருக்கும் என டி டி வி தினகரன் கூறினார் .


Comments are closed.