- Advertisement -

திருச்சியில் பாஜக பொருளாதார பிரிவு சார்பில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு விளக்க கூட்டம் – மாநில தலைவர் பங்கேற்பு!

- Advertisement -

தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவு சார்பில் இந்திய பொருளாதாரத்தை மாற்றிய ஜிஎஸ்டி
விழிப்புணர்வு விளக்க கூட்டம் மற்றும் பாஜக பொருளாதார பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் கே.எஸ்.சங்கர் வரவேற்றார். பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் டி.ரிகன்யா அறிமுக உரை நிகழ்த்தினார்.

Bismi

பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி சுரேஷ் தலைமை உரையாற்றினார். இதில் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் கே.கே. ஒண்டி முத்து, திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் எம்.காளீஸ்வரன், திருச்சி மாவட்ட பொது செயலாளர் ஏ.என்.எம் அழகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

Vagai

இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதன் நன்மைகளை விளக்குதல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முடிவில் திருச்சி மாவட்ட துணை தலைவர் என்.ராமநாதன் நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்