- Advertisement -

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா!

- Advertisement -

தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்பா – ஊர்வசி திரையரங்கம் அருகில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதிய ஷோரூமை ரம்பா தியேட்டர் நிறுவனர் என்.மாணிக்கம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன் மற்றும் திருச்சி மாவட்ட எக்ஸ்னோரா துணைத் தலைவர் கலாவதி சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல் விற்பனையை தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார், முதல் விற்பனையை திருச்சி ஜூவல்லரி சங்க தலைவர் விஜயராகவன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன் பேசுகையில்,…

Bismi

தீபாவளிக்கு முன்னதாக திருச்சியில் ஒரு ஷோரூம் திறப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. பண்டிகை காலத்தில், எங்கள் வாடிக்கையாளர்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கும் அதே வேளையில், பாரம்பரியம் மாறாத அதே சமயம் நவீன ஆடைகளை அணிந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். திருச்சி எப்போதும் எங்களை அன்புடன் வரவேற்றுள்ளது, தீபாவளி ஷாப்பிங்கை குடும்பத்தில் உள்ள பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எங்களின் இந்த ஷோரூம் இங்கு திறக்கப்பட்டு உள்ளது என்றார்.

Vagai

இந்த புதிய ராம்ராஜ் காட்டன் ஷோரூமில் பிராண்டின் சின்னமான வெள்ளை வேட்டிகள் மற்றும் சட்டைகள் முதல், ஆண்கள்-பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை கால ஆடைகள் வரை ஏராளமாக உள்ளன.

இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் ராம்ராஜ் காட்டன் தலைவர் கே.ஆர்.நாகராஜன், சுயம்வர கிராண்ட், பரிணயம் கிராண்ட், சங்கல்பம் கிராண்ட் மற்றும் ஜாக்கார்டு பார்டர்களுடன் கூடிய பிரீமியம் துணிகளில் வடிவமைக்கப்பட்ட வேட்டி-சட்டைகளின் கிராண்ட் கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தினார். ஸ்கை ப்ளூ, கோல்ட், மோஸ் கிரீன் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஆடைகள், பண்டிகையை உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்