தமிழக முதல்வரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் மரக்கடை அருகே உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு திருச்சி (ஓபிஎஸ் அணி) மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி நடராஜனின் அறிவுறுத்தலின்படி
மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் மற்றும் திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவகர்லால் நேருவின் ஏற்பாட்டில் காந்தி மார்க்கெட் பகுதியில் மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஜங்ஷன் பகுதி செயலாளர் ஏ.பி.சேகர்,உறையூர் பகுதி பிரதிநிதி தென்னூர் பிரேம்,கணேஷ், சந்துக்கடை சந்துரு ஆட்டோ ரஜினி, பிரேம்,விஷ்வா மற்றும் வட்டச் செயலாளர்கள்,மகளிர் அணியினர், பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.