காந்தி கண்ணாடி திரைவிமர்சனம் – மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் அதிக திரையரங்குகளில் வெளியீடு
காந்தி கண்ணாடி திரைவிமர்சனம் – மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் அதிக திரையரங்குகளில் வெளியீடு
காந்தி கண்ணாடி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது திரைப்படத்தினை ஜெய்கிரண் தயாரித்துள்ளார், ஷெரிப் இயக்கத்தில்
கேபிஓய் பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார், பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், காந்தி கண்ணாடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது காந்தி கண்ணாடி தமிழக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமா வட்டாரங்களில் அதிகமாக கே பி ஒய் பாலா வை பற்றி வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதலில் குறைந்த தியேட்டர்களில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது மக்களின் வரவேற்பை பெற்றிருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் வெளியாகி உள்ளது, மக்களின் வரவேற்பு பெற்ற கே பி ஒய் பாலா தமிழகம் முழுவதும் காந்தி கண்ணாடி படம் ஓடும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி கூறி வாழ்த்துகளைப் பெற்று வருகிறார்.

காந்தி கண்ணாடி கதைக்களம்:
சினிமா ஸ்டுடியோவில செக்யூரிட்டி வேலை பார்க்கும் (பாலாஜி சக்திவேல்) காந்திக்கு, மனைவி (அர்ச்சனா) கண்ணம்மா மீது அளவுகடந்த பாசம். காந்தியும், கண்ணம்மாளும் காதலித்தபோது ஆசைப்பட்ட கல்யாணம், தங்களது 60வது கல்யாணத்தின் மூலம் அவர் ஆசைப்பட்ட மாதிரியே ஜாம் ஜாம்னு நடத்த ஆசைப்படுகிறார்.
அதற்காக ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தும் (கேபிஓய் பாலா) கதிர் விடம் போய் திருமணத்துக்கான ‛பட்ஜெட்’ கேட்கிறார். அவரோ 52 லட்சம் என சொல்லிவிட்டு, இவ்வளவு பணம் அவரிடம் இருக்குமா என சந்தேகப்படுகிறார்.
தனது சொந்த ஊரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தின் பத்திரத்தை கதிர்விடம் கொடுக்கிறார், அதனை கதிர் ஒரிஜினலா என்று சரி பார்த்துக் கொண்டு, காந்தியை தனது காரில் அழைத்துக் கொண்டு காதலி, நண்பனுடன் கோயமுத்தூரில் இருக்கும் அந்த இடத்திற்கு செல்கிறார், ஆனால் அந்த இடம் காந்தியின் சகோதரர்கள் காந்தி இருப்பதை மறைத்து ஒருவருக்கு விற்றது தெரிய வருகிறது,
ஒரு வக்கீலின் மூலம் 10 கோடிக்கு
டீல் பேசுவது கூட தெரியாமல்,
தனது மனைவியின் ஆசை நிறைவேறினால் போதும் என்று கணக்கு போட்டு வெறும் 80 லட்சத்துக்கு ,
அந்த பணத்தை சென்னைக்கு கொண்டு வருகிறார் காந்தி, அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு (கேபிஓய் பாலா) கதிர் 60வது திருமண ஏற்பாடுகள் தொடங்குகிற வேளையில் ஈடுபடுகிறார், ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்துவதில் எதிரிகளால் சிக்கல்,
அந்த நேரத்தில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்துகிறது. காந்தியிடம் இருக்கும் பணத்தை மாற்ற முடியாத நிலை. பணத்தாசையில் (பாலா) கதிர்ரும் சில வேலைகளை செய்கிறார்.
தடைகளை மீறி காந்தி,கண்ணம்மா 60வது திருமணம் நடந்ததா? கதிர் அதை நடத்தி வைத்தாரா என்பது காந்தி கண்ணாடி கதைக்களம் .
கதையின் கரு:
60வது திருமணத்தை நடத்த ஆசைப்படும் (பாலாஜி சக்திவேல்) காந்தி, அதை நடத்தி வைக்க முயற்சிக்கும் (பாலா) கதிர் என இரண்டு ஹீரோ சப்ஜெட் படம் தான் காந்தி கண்ணாடி படத்தின்கரு.
காந்தி கண்ணாடி பெயர் அர்த்தம்:
பாலாஜி சக்திவேல் கேரக்டர் காந்தி பெயருக்கும், கண்ணாடிக்கு என்ன அர்த்தம் என்பதை படத்தின் கடைசியில் சொல்லியிருக்கிறார்கள்.
பாலாஜிசக்திவேல் நடிப்பு:
மனைவி சமைத்து கொடுக்கும் லெமன் சாதம், தயிர்சாதம், புளி சாதத்தை கூட புகழ்ந்து தள்ளி, மனைவியை 60வது வயதிலும் காதலிக்கிற, பாசத்தால் பொங்குகிற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் பாலாஜிசக்திவேல். அதற்கு அவர் சொல்கிற பிளாஷ்பேக் காரணமும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. நல்ல கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள புரிதலை தெளிவாக காட்சி அமைத்திருக்கின்றனர்,
தனது 60-வது திருமணத்திற்காக கதிர் காந்தியை அவ்வப்போது கலாய்த்தாலும், அது பற்றி கவலைப்படாமல், தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருக்கிறார். காந்தியை ஜமீன் என்று அவரை, கேபிஒய் பாலா டீம் அழைக்கிறது. குறிப்பாக, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் கைவசம் இருக்கிற பணத்தை மாற்ற அவர் முயற்சிக்கும் விஷயங்கள் அப்பாவிதனம். பாலாஜிசக்திவேல் உடன் வேலை பார்க்கும் நண்பனாக அமுதவாணன் நடித்திருக்கிறார்.
கேபிஒய் பாலா :

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் பாலா, சிவகார்த்திகேயன் மாதிரி காமெடி பண்ணுவார் என்று நினைத்தால், தனது முதல் படத்திலேயே அழுத்தமான ரோலில் நடித்து இருக்கிறார். பாலாஜி சக்திவேலுக்கும் அவருக்குமான சீன்கள், ஓட்டம், கிண்டல் படத்தின் பிளஸ். கடைசி அரைமணி நேர நடிப்பில் பலரை அழ வைத்துவிடுகிறார் பாலா. அவரிடம் இருந்து இப்படிப்பட்ட கேரக்டர், இந்த நடிப்பை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சில சீன்களில் நடிக்காமல் அப்படியே நிற்கிறார். அதை மாற்றிக் கொள்ள வேண்டும், தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அவர் நடிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்,
நமிதா கிருஷ்ணமூர்த்தி:
பாலா டீமில் இருக்கிற ஹீரோயின் நமிதா கிருஷ்ணமூர்த்திக்கு அதிகம் வேலை இருந்தாலும், ஒரு எமோஷன் காட்சியில் மட்டும் மனதில் நிற்கிறார்.
அர்ச்சனா:
பாலாஜி சக்திவேல் மனைவியாக வரும் அர்ச்சனா கண்ணம்மாள் பற்றி கேட்கவே வேண்டாம். குறிப்பாக, அந்த சோகமான கிளைமாக்சில் பின்னி எடுத்துகிறார் நடிப்பில்.
பார்வையாளர்களின் கருத்து:
பல இடங்களில் நடிப்பில் செயற்கை தனம் இருந்தது. பல சீன்கள் சினிமாதனமாக இருப்பதும், நடிகர்களின் ஓவர் ஆக் டிங்கும் படத்தை நம்மிடம் இருந்து தனிமைப்படுத்துகிறது.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்த விஷயம் இன்றைய காலத்துடன் ஒட்டாமல் இருப்பதும் படத்தின் மைனஸ் அதில் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும் .
விவேக் மெர்வினின் அந்த மேரேஜ் பாடல் சூப்பர்.
பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.
பாலாஜி கே ராஜா கேமரா தரம்.
பாலாஜி சக்திவேல், பாலா, அர்ச்சனா, அமுதவாணன் தவிர மற்றவர்கள் நடிப்பு சுமார்
படத்தின் கிளைமேக்ஸ் சீனை இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடுத்து எடிட் செய்திருக்கலாம்,
பாலாவின் கேரக்டர் உண்மை தன்மை , அவர் பணத்துக்காக ஆசைப்படுகிறது தான் அதனை இன்னும் அழுத்தமாக காட்டி இருக்கலாம்,
காந்தி, கண்ணம்மாவுக்கு குழந்தை இல்லாத நிலை, கதிர் அதனை நிறைவேற்றுவாரா என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது,
குழந்தை இல்லாத நிலையில், அந்த வயதிலும் அவர்கள் காட்டுகிற பாசம், புரிதல் ஆகியவை படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள்.
படத்தின் கிளைமாக்ஸ் மனதில் நிற்கிறது. ஆனால், அதற்கு முந்தைய பல சீன்கள் போராடிக்கின்றன.
நிஜத்தில் நல்லது செய்கிற பாலா, சினிமாவிலும் அந்த இமேஜை கொண்டு வர முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
காந்தி கண்ணாடி – மூலம் காமெடி பண்ணுவார்னு நினைத்தால், அனைவரையும் கண் கலங்க வைக்கிறார் பாலா,
இயக்குனர் கணவன் மனைவிக்குள் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை மிகவும் எதார்த்தமாக தெளிவாகவும் மக்களுக்கு புரியும் வகையில் இயக்கி உள்ளது அற்புதம்
தமிழ் சினிமாவில் புதிதாக களம் இறங்கியுள்ள கே பி ஒய் பாலா அவர்களுக்கு தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக விளம்பர வாழ்த்துக்கள்
சோழன் பார்வை ஆசிரியர்





Comments are closed.