- Advertisement -

Actor Velmurugan நடிகர் வேல்முருகன்

- Advertisement -

Actor Velmurugan

நடிகர் வேல்முருகன்

தமிழ், மலையாளம்  திரைப்படங்களில், நாடகங்களிலும் நடித்து வருகிறார், பள்ளி பருவ காலம் முதல் மாறுவேட போட்டி, மேடை நாடகம் நடித்தல் போன்ற நிகழ்வுகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு நடித்து வந்தவர், இன்று வரை பல்வேறு வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்…

Vagai

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் உறுப்பினர்,
பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் நிறுவன தலைவர்.

இயல், இசை, நாடகக் கலைஞர்களுக்காக பன்முகக் கலைஞர்கள் கலைக்குழு, மற்றும் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
மேலும் சோழன் பார்வை செய்தி இதழ், www.cholannews.com வெப்சைட் நடத்தி வருகிறார்.

கலைக்குழுவின் பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நாடகங்கள், குறும்படங்கள் இயக்கி வருகிறார்.

இயல், இசை, நாடக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

இதுபோன்று தலைசிறந்த சமூக சிந்தனையுடன் சேவை ஆற்றி வருவதால் போலீஸ் பார்வை செய்தி இதழ் சார்பாக பன்முகக் கலைஞன் விருது வழங்கப்பட்டுள்ளது, தஞ்சாவூரில் செயல்படும் தென்னக பண்பாட்டு மையத்தில் சார்பில் நடைபெறும் வரலாற்று நாடகங்களில் நடித்து பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நடைபெறும் வரலாற்று நாடகங்களின் நடித்து பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்,

Bismi

தமிழில் நடித்த திரைப்படங்கள் ஒரு சில…

கருப்பன், மிருதன், ரெக்க, 144, கொம்பன், அடங்காதவன், விலங்கு வெப் சீரியஸ்

தமிழ் சீரியல் ஒரு சில…

சரவணன் மீனாட்சி, நாதஸ்வரம், குலதெய்வம், வாணி ராணி

மலையாளத் திரைப்படம் ஒரு சில…

மரியாதை ராமன், கசின்ஸ், ஜமுனா பியாரி

இயக்கியுள்ள குறும் படங்கள்

Keeraidheen youtube தளத்தில் வெளியாகி உள்ளது

என்.காவியா 1, என்.காவியா 2, வயம் (போதை ஒழிப்பு), தட்டாம்முட்டி பஞ்சாயத்து

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்