- Advertisement -

நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தன்சிகாவுக்கு பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் தலைவர் வாழ்த்து 

- Advertisement -

நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தன்சிகாவுக்கு பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் தலைவர் வாழ்த்து

 

நடிகர் விஷால் தன்ஷிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக விஷால் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

 

Vagai

தன்ஷிகா நடித்த படத்தின் இசை விழாவில் சமீபத்தில் தன்ஷிகாவை காதலித்து வருவதை உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் விஷால் – தன்ஷிகா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என்று விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

 

 

Bismi

அதனைத் தொடர்ந்து

இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி தனது சமூக வலைதளத்தில் விஷால், “இந்த பிறந்த நாளில் உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் எனக்கு வாழ்த்து கூறி ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்,

 

இன்று எங்கள் குடும்பங்கள் சூழ எனக்கும் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்ற சந்தோஷமான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் உற்சாகத்துடன், நம்பிக்கையுடன், ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இந்த அறிவிப்புக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள், பன்முக கலைஞர்கள் நலசங்கத்தின் தலைவர் வேல்முருகன் எங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய நடிகர் விஷால் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்