உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு முனைவர் பா ஜான் ராஜ் குமார் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது நாம் வாழும்போது ரத்த தானம், வாழ்ந்த பின் உடல் தானம். இன்றைக்கு உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது அது வரவேற்கத்தக்கது,
எமது ஜே கே சி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி கருத்தரங்கம் விழிப்புணர்வு நடத்தி வருகிறோம், அதுபோல் கடந்த 2017 செப்டம்பர் 22 ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம் உழவர் சந்தையில் இருந்து நமது அண்ணா ஸ்டேடியம் வரைக்கும் மிகப்பெரிய ஒரு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.
அதில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், வாலிபர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரம் பேர்கள் மேல் கலந்து கொண்டார்கள்,
நானும் உடலுறுப்பு தானம் செய்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு நிறைவு செய்த ஆறாவது ஆண்டை நோக்கி செல்கிறேன்,
உடலுறுப்பு தானம் என்பது ஒரு விழிப்புணர்வு மட்டும் அல்ல அது நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மனப்பக்குவமும், நம்முடைய சுற்றத்தார், உறவினர்கள், ஏன் கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒரு விஷயம், நான் உடல் உறுப்பு தானம் செய்த போது என்னுடைய மனைவி யாரைக் கேட்டு இதை செய்தீர்கள் என்று சொன்னார், நான் யாரை கேட்டு செய்ய வேண்டும்
என் உடலை தானம் செய்வதற்கு, யாரையும் கேட்க வேண்டியது அவசியம் இல்லை என்று கூறினேன்,
இல்லை என்ன கேட்காமல் நீங்க பண்ணிட்டீங்களே என்று வருத்தப்பட்டார், அதன்பின்பு அவங்களுக்கு விளக்கம் எடுத்து சொல்லி புரிய வைத்த பிறகு அவர் ஏற்றுக்கொண்டார், அதேபோல உடலுறுப்பு தானம் என்பது நிறைய பேருக்கு வந்து புரியாத புதிர்,
பயம் வரும் அல்லது இது ஏன் செய்யணும்னு சொல்லி கேள்வி கேட்பாங்க, இதெல்லாம் முட்டாள்தனம் சொல்லுவாங்க, இது நமது மத கோட்பாடுக்கு எதிரானது என்று கூட சொல்லுவாங்க, எதுவாக இருந்தாலும் நம்மை கொண்டு போய் அடக்கம் செய்யும்போது அது பெட்டியில் வைத்து பல அணிகள் அடித்து முடி வைத்திருந்தாலும், அதை பூச்சிகள் தின்று வெறும் எலும்பு கூடாக தான் நம்முடைய உடல் இருக்குமே தவிர,
அந்த உடல்ல ஒரு பொருளும் அந்த பெட்டிக்குள் இருக்காது, குறைந்தபட்சம் ஆறு மாசத்துக்குள்ளாக நீங்கள் சென்று அந்த பிரேதப்பட்டியை திறந்து பார்த்தால் அதில் எலும்புக்கூடுகள் மண்டை ஓடு தலை முடி இவைகளை தவிர ஒன்றுமே இருக்காது, துணியை கூட அந்த செல்களை அறித்து கொன்றுவிடும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை உள்ள நிலை, இன்றைக்கு உடல் உறுப்பு தானம் இன்றைக்கு எத்தனையோ பேர் வந்து விபத்துக்குள்ளாகி மரித்துப் போய் விடுகிறார்கள் குறிப்பாக திருச்சி பீமநகரில் இருக்கக்கூடிய நளினி 2014 ஆம் வருஷத்திலே அவர்கள் மரித்த போது அவருடைய உடல் உறுப்புகள் அனைத்தும் ஐந்து பேருக்கு பொருத்தப்பட்டு இன்றைக்கு உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவரது நினைவாக ஆடிட்டர் வீரமணி ஆண்டுதோறும் நல திட்டங்களை வழங்கி வருகிறார். அரசு பாராட்டியிருப்பது சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் இறந்தும் இன்றைக்கு ஐந்து பேர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனவே நாம் மரிக்கும்போது நம்முடைய உடல் உறுப்பு மற்றவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்க வேண்டும். கண், இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய பாகங்கள் மற்றவர்கள் பொருத்தப்படும் போது அவர்கள் உயிர் வாழ பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது விருப்பமாக இருக்கிறது, எனவே அதுதான் உண்மை எனவே உடல் உறுப்பு தானம் என்பதை யாரும் பயப்பட வேண்டாம், நாம் வாழும்போது ரத்த தானம், வாழ்ந்த பின் உடல் உறுப்பு தானம் செய்வீர் நம்மால் மற்ற ஒரு ஐந்து பேராவது வாழ வைப்போம் என்று தனது உரையில் கேட்டுக் கொண்டார்.