விஷ்வ இந்து பரிசத்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் அழகு யுவராஜ் தலைமையில் ஆதரவாளர் சேர்கை நடைபெற்றது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள பெரிய கடை வீதி பகுதியில் ஆதரவாளர் சேர்க்கை நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் கோபாலன், பகுதி தலைவர்கள் ரவிச்சந்திரன், நவநீத கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர்கள் ரமேஷ் , மலைக்கோட்டை பகுதி செயலாளர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டனர்.