திருச்சியில் 2023 ஆண்டு ஜனவரி மாதம் வேதாகம கல்லூரி தொடக்க விழா நடைபெறுகிறது என்று ஜீசஸ் தி கிங் ஆப் கிங்ஸ் சர்ச் ஆப் இந்தியா நிறுவனரும், பேராயிருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சபை சார்பில் தமிழகம் முழுவதும் 2000க்கும் மேலான போதகர்கள், ஊழியர்கள், அருட்பணியாளர்கள் உள்ளனர். திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை, வேலூர், சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல பேராயங்கள் இயங்கி வருகிறது.
மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, டெல்லி மேற்குவங்கம்
உட்பட 16 மாநிலங்களில் நிர்வாகிகள் பேராயர்கள் உள்ளனர்.
சமூகநல சேவையில் முன்னோடி இயக்கமாக சுயாதீனத்தை சுதேசி கொள்கையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறோம்.
சுதேசி கொள்கை கொண்டவர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
இந்திய தேச நலனுக்காக பிரார்த்தனை செய்வதும் அனைத்து மக்களும் ஒற்றுமை சமாதான சமத்துவம் வாழ பாடுபடுகிறோம்.
2022 டிசம்பர் 22ஆம் தேதி அன்று திருச்சியில் 33வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மத நல்லிணக்கம் மனித மாண்பை போற்று வண்ணமாக நடைபெறுகிறது. அதில் நல திட்டங்கள் வழங்கப்படும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.
எமது அமைப்பின் சார்பில் இதுவரை திருச்சி மற்றும் தமிழகத்தில் மழை வெள்ளம் தீ விபத்து சாலை விபத்து மற்றும் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் போன்றவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்.
அதுபோல் ஒரு சிலருக்கு மருத்துவ உதவிகள், இயன்ற சில பொருள் உதவி செய்து வருகிறோம். எனவே எங்களுடைய திருச்சபை இயக்கங்களுக்கு உங்களுடைய அன்பான உதவிகளை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் எங்களுடைய வளர்ச்சிகளில் பங்கெடுக்கும்படி அன்போடு அழைக்கிறேன்.
வேதாகம அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் கொண்டு நடத்தப்படுகிறது நடத்தப்படும். அட்மிஷன் நடைபெறுகிறது.
இவ்வாறு முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.