- Advertisement -

சமூகப் பணித்துறையின் கலடியாஸ்கோப் எனும் மாணவர் அமைப்பின் துவக்க விழா – ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி

- Advertisement -

சமூகப் பணித்துறையின் கலடியாஸ்கோப் எனும் மாணவர் அமைப்பின் துவக்க விழா – ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி

 

Bismi

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி சமூகப் பணித்துறையின் கலடியாஸ்கோப் எனும் மாணவர் அமைப்பின் துவக்க விழாவானது 14.08.2025 வியாழக்கிழமையான இன்று கல்லூரியின் குளிர்மை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக பணித்துறையின் துறை தலைவர் முனைவர் ஆ.அருண்பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார்.

Vagai

 

கல்லூரி முதல்வர் முனைவர் மா. பிச்சைமணி அவர்கள் கலந்து கொண்டு தலைமையுரையாற்றி மாணவர் அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு பெயர் பொறிக்கப்பட்ட பட்டைகளை வழங்கி முறைப்படி அமைப்பினை தொடங்கி வைத்தார் அதை தொடர்ந்து கலைப்புல முதன்மைர் முனைவர் லக்ஷ்மி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறையின் உதவி பேராசிரியை முனைவர் ந.சித்ரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமூக பணித்துறை களப்பயிற்சியாளர்களுக்கு அதன் நோக்கம் மற்றும் சிறப்பம்சங்களை பற்றி விளக்கங்களுடன் கூடிய முன்மாதிரி விளையாட்டுகளை நடத்தி விவரித்தார். சிறப்பு விருந்தினருக்கான நினைவு பரிசினை உதவி பேராசிரியை முனைவர் சசிகலா அவர்கள் வழங்கினார். நிகழ்வின் நிறைவாக உதவி பேராசிரியர் திரு. மாதவன் அவர்கள் நன்றியுரை வழங்கிட நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்