வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

0

கத்தோலிக்க தலித் கிறிஸ்தவ வீட்டு மனை கோருவோர் நல அமைப்பு சார்பில் தலைவர் அம்பு ரோஸ் தலைமையில் குடியிருப்பு வாசிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

- Advertisement -

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டி பாத்திமா நகர் பகுதியில் சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக 25 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் வீட்டுமனை பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே நத்தம் பகுதியில் அரசுக்கு சொந்தமாக இருக்கும் காலி மனையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
நத்தம் காலிமனையில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்