குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

- Advertisement -

குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

 

- Advertisement -

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், இன்று ( ஆகஸ்ட். 11) திருநெல்வேலியிலும் நடைபெற்றது. இங்குள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்ற இந்த முகாமிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் பங்கேற்று, மாவட்ட மக்களிடமிருந்து, நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார். “பெறப்பட்ட மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, அவற்றின் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!- என, மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவருடன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜ செல்வி மற்றும்பல்வேறுச் துறைகளை சார்ந்த, உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் போது, மாற்றுத் திறனாளிக்கு இன்ஜின் பொறுத்தப்பட்ட 3 சக்கர வாகனம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, பயனாளிகள் நால்வருக்கு, விலையில்லா தேய்ப்புப்பெட்டிகள் ஆகியவற்றை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்