அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் சுப்பையா பாண்டியன் மற்றும் தமிழரசி சுப்பையா பாண்டியன் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில்,
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வளர்மதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி ஆகியோரது முன்னிலையில் சித்த மருத்துவர் சுப்பையா பாண்டியன் மற்றும் முன்னாள் சுகாதாரக் குழு தலைவர் சித்த மருத்துவர் தமிழரசி ஆகியோர் திருச்சியில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தனர்.
இதில் சித்த மருத்துவர் சுப்பையா பாண்டியன் ஏற்கனவே அதிமுகவில் மருத்துவர் அணி தலைவராகவும், தமிழரசி சுப்பையா மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.